திடுக்கிட்டு கண்விழித்த அவனது இதயம் சற்று வேகமாக துடிக்க ஆரம்பித்தது. அவனது வாய் வரண்டு போய்இருந்தது. காதலி காதலனின் பிரிவில் ஏங்குவதைப்போல அவனது உடல் தண்ணீருக்காக ஏங்கியது. மெல்ல எழுந்தான். அருகில் இருந்த ட்ரெசிங் டேபிள் கண்ணாடியில் தனது முகத்தை பார்த்தான். தனது உடலுக்கும், முகத்திற்க்கும் சற்றும் சம்பந்தமே இல்லாதவாறு இருந்தது. சிகரெட்,கஞ்சா, கவலை, சரக்கு, மாத்திரை என அனைத்தும் அவனது முகத்தை ஏதோ மாதிரி ஆக்கியிருந்தது. மெல்ல ஃபோனை சார்ஜ் போடுவதற்க்காக எடுத்தான். அதில் மணி 8:17 என்று காட்டியது. திவ்யா 5 மிஸ்டுகால் என்று வந்திருந்தது. எதையும் பெரிதாக கண்டுகொள்ளாமல் ஃபோனை சார்ஜ் போட்டுவிட்டு மெல்ல கிட்சனுக்கு சென்றான். அப்படியே ஒரு சில்வர் செம்பில் தண்ணீரை குடித்துக்கொண்டிருந்தான். அவனது நாக்கின் சுவை நரம்புகளுக்கு அந்த தண்ணீர் தேவாமிர்தமாக இருந்தது. மெல்ல அப்படியே பாத்ரூமிற்கு வந்தான். வருவதற்கு முன் ஹாலில் சிகரெட் பாக்ஸ் அவனது கண்ணை பரித்துக்கொண்டிருந்தது. உத்தமன் வெளியே சென்று விட்டார் என்று தெரிந்தது. மெல்ல அந்த சிகரெட் பாக்ஸை திறந்தான். அதில் இரண்டே சிகரெட் மட்டும் தான் இருந்தது. ஒன்றை எடுத்தான். மெல்ல தனது பாக்கெட்டில் இருந்து கஞ்சா பாக்கெட்டை எடுத்தான். கால் பாக்கெட் மட்டும் தான் இருந்தது. மெல்ல கொஞ்சம் கஞ்சாவை கையில் எடுத்துப் போட்டு கசக்க ஆரம்பித்தான். சிகரெட்டை காதில் சொருகினான். மெல்ல பாத்ரூமிற்க்குள் நுழைந்து சந்தன நிற வெஸ்டர்ன் டாயிலட்-ல் உட்கார்ந்தான். கஞ்சா விதைகளை அப்படியே உள்ளே போட்டான். அப்படியே சிகரெட் நுணியை பிடித்து மெல்ல அமுக்கி உருட்டினான். சிகரெட் துகள்கள் மெல்ல அதிலிருந்து வெளியே வரத்தொடங்கியது. மெல்ல அந்த சிகரெட் துகளோடு கஞ்சா துகளும் சேர்ந்தது. பாதி சிகரெட் துகளை அடியில் கொட்டினான். மீண்டும் சிகரெட் துகளை காதில் சொருகினான். கஞ்சாவையும், சிகரெட்டையும் நன்றாக மிக்ஸ் செய்தான். மெல்ல அந்த கலவை உருவாகியப்பின். பிறகு மீண்டும் தனது காதிலிருந்த சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தான். அப்படியே தனது இடது கையில் இருந்த கஞ்சாவை சிகரெட் மூலம் உறிஞ்சி சிகரெட்க்குள்ளே இழுத்தான். பாதி சிகரெட் நிரம்பியது. மெல்ல தனது இடது கை கட்டைவிரலின் நகத்தில் அந்த சிகரெட்டை தட்டினான். கஞ்சா பாதியளவு சிகரெட்டை அடைத்தது. மீதமிருந்த கஞ்சாவை சிகரெட்டை மேலும் கீழுமாக கஞ்சாத்துகளில் வைத்து தேய்த்தான். மீதமிருந்த துகள்களும் சிகரெட்டிற்க்குள் அடைபட்டுக்கொண்டது. மெல்ல தனது கட்டைவிரல் நகத்தில் தட்டிக்கொண்டான். முழுவதுமாக சிகரெட்டை கஞ்சாத்துகள் நிறைத்துவிட்டது. மெல்ல மீதமிருந்த சிறிய துகள்களை ஒன்று சேர்த்து உருட்டி சிகரெட்டின் மேல் பகுதியில் வைத்து அடைத்தான். மெல்ல தனது வாயில் அந்த கஞ்சா சிகரெட்டை வைத்தான். தனது ட்ரவுசர் பாக்கெட்டில் கைவைத்து தனது கேஸ் லைட்டரை எடுத்து பற்ற வைத்தான். அப்படியே அந்த புகை அவனது சுவாச மண்டலத்திற்க்குள் நுழைந்து அப்படியே இரத்தத்தில் கலந்தது. அவன் வயிற்றில் ஏதோ ஒரு மாற்றம். மெல்ல வாயை திறந்து கஞ்சா புகையை மேலே ஊதினான். நல்ல நீல நிறத்தில் இருந்தது அந்த புகை. அந்த புகை மெல்ல சுருள் வடிவமாகியது. வழக்கத்தைவிட வித்யாசமாக சுழன்றது. மெல்ல அந்த சுழல் ஒரு பெண்ணின் உருவமாக மாறியது. அந்த கஞ்சா புகை ஒரு பெண்ணின் வடிவமாக மாறியது. புகைவடிவில் ஒரு பெண் உருவம். அந்த புகையிலும் அந்த பெண்ணின் முகத்தை பார்த்தான். அது ஆதினி தான். ஆவி என்பார்களே அதேபோல் அவன் முன்பு இருந்தாள் ஆதினி. பைரவ் முதலில் சற்று பயந்தாலும். ஆதினி தான் என்று தெரிந்தவுடன் மெல்ல சரியாகிவிட்டான்.
YOU ARE READING
வன்மம் 18+
Actionஇது ஒரு பாவக்கதை. இளகிய மனம் கொண்டவர்கள் படிப்பதற்க்கான கதை அல்ல. முழுக்க, முழுக்க இருள் சூழ்ந்த மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான் இந்தக்கதை. இதில் அதிகப்படியான ஆபாசக்காட்சிகள் வரும் காரணத்தினால் முன்கூட்டியே எச்சரித்துவிடுகின்றேன் இது திறந்த உள்ள...