தான் யார் என்ற கேள்விக்கு விடை கண்டுபிடித்து விட்டான். இது தெரியாமல் சாமியார்களிடம் சென்று பணத்தை இழந்து கொண்டிருக்கின்றது இந்த மனித சமுதாயம். வாழ்க்கையில் உங்களுடைய மிகப்பெரிய கனவை நீங்கள் அடைந்தாலும் இறுதியில் வெறுமை மட்டுமே உங்கள் மனதில் தங்கும் அப்போது தோன்றும் கேள்வி தான் நான் யார்? சாவதற்க்கு முன்பு இந்த கேள்விக்கு விடையை கண்டறிய வேண்டும். பலர் இந்த கேள்விக்கு பதில் தெரியாமலே ஒரு ரோபோ போன்ற வாழ்க்கையை வாழ்ந்து இறந்து விடுகின்றார்கள். சரி யார் காலிங்பெல் அடிப்பது என்று பார்ப்போம் வாருங்கள். மெல்ல நடந்தான் பைரவ். மெல்ல கதவினை திறந்தான். வெளியே ரேகா கையில் ஒரு கின்னத்துடன் நின்றுகொண்டிருந்தாள். வெள்ளை நிற நைட்டியுடன் நின்று கொண்டிருந்தாள். அதில் வான்நீல நிறத்தில் குட்டி குட்டி பறவைகளின் படம் அழகாக இருந்தது.
பைரவ்: உள்ள வா.
அவனது குரலின் மாற்றத்தை கவனித்தாள். தனது மெல்லிய வெள்ளிக்கொலுசு அணிந்த பாதங்களால் உள்ளே நடந்து வந்தாள். பைரவ் கதவை சாத்தினான். அவள் மெல்ல பைரவ்-யின் கழுத்தை பார்த்தாள். பைரவ் அவனது ரூமிற்க்குள் சென்று உடைகளை மாற்ற ஆரம்பித்தான். ஒரு காக்கி நிற ட்ரவுசர் மற்றும் கருப்பு நிற டீ சர்ட் போட்டான். அந்த டீசர்ட்டில் "ஓன் லவ்" என்ற பாப் மார்லி பாடலின் வசனம் எழுதப்பட்டிருந்தது. மெல்ல தனது ரூமில் தலையை துவட்டிக்கொண்டிருந்தான். ட்ரெசிங் டேபிள் கண்ணாடியில் தனது முகத்தை பார்த்துக்கொண்டு தலையை துவட்டிக்கொண்டிருந்தான். ரேகா ஹாலில் அப்படியே பேய் அறைந்தார் போல் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். கீழே கிழிந்து கிடந்த சேலையை பார்த்தாள். மேலே அந்த சேலையின் நுணி கிழிந்து தொங்குவதையும் பார்த்தாள். வேகமாக கிட்சனுக்குள் சென்றாள். அந்த கின்னத்தை டமார் என்று வைத்து விட்டு விலக்கமாரை எடுத்தாள். வேகமாக தனது நைட்டியை தூக்கிக்கொண்டு இடுப்பில் சொருகிக்கொண்டு பைரவ்-யின் பெட்ரூமிற்க்கு ஆவேசத்துடன் வந்தாள். அவன் தலையில் தேங்காய்எண்ணெய் தேய்த்துக்கொண்டிருந்தான். அவன் முதுகில் சடார் என்று விலக்கமாற்றால் அடித்தால். துரைப்பாண்டி லத்தியால் அடித்த இடத்தில். இன்னும் அவனது உடல் காயங்களும் ஆறவில்லை. அந்த இடத்தில் ரேகா அடிக்கவும் ஆஆஆஆஆஆ.... என்று கத்திக்கொண்டே முதுகில் கைவைத்து திரும்பினான். அவன் கண்களில் ஆக்ரோசம் அதிகமாக இருந்தது. ரேகா சரிமாறியாக அவனை அடிக்க ஆரம்பித்தாள். ஏற்கனவே காயம் பட்ட இடத்தில் அடிக்கவும் வலி அவனால் பொறுக்க முடியவில்லை. ஒரு கையில் விலக்கமாற்றை பிடுத்து தூக்கி எரிந்தான். அப்படியே ரேகாவின் கழுத்தில் கைவைத்து பிடித்தான். அவளை தள்ளிக்கொண்டே சுவற்றில் மோதி நிற்க வைத்தான். அவனது கண்களில் அவ்வளவு ஆக்ரோஷம் தெரிந்தது. இடது கையில் ரேகாவின் குரல் வளையை பிடித்து இருந்தான். ஆனால், கழுத்தை நெறிக்கவில்லை. தனது வலது கையை முறுக்கி அப்படியே மடார்.... என்று சுவற்றில் குத்தினான். மறுபடியும் டமார்...
டமார்.... என்று ஆக்ரோசமாக குத்தினான். அவள் முகத்திற்க்கு பக்கதில். மறுபடியும் ஆக்ரோஷம் அடங்காமல் டமார்....டமார்...டமார்.... என்று குத்திக் கொண்டே இருந்தான் கையில் இருந்து இரத்தம் வழியத்தொடங்கியது. ரேகாவின் கண்களில் கண்ணீர் வரத்தொடங்கியது. அதை பார்க்கவும் பைரவ் மெல்ல அவள் கழுத்தில் இருந்து கையை எடுத்தான். இரத்தம் வழிந்து கொண்டிருக்கும் வலது கை குத்துவதை நிறுத்தினான். ரேகா-வை விட்டு மெல்ல விலகினான். மெல்ல கஞ்சா சிகரெட்டை எடுத்து வாயில் வைத்து பற்ற வைத்தான். கஞ்சா அவன் ஆத்மாவை உடலில் இருந்து மெல்ல பிரித்து. உடலைவிட்டு வெளியே எடுத்து காற்றில் சிறிது நேரம் பறக்க வைத்து விட்டு மெல்ல மீண்டும் அவனது உடலுக்குள்ளேயே திருப்பி அனுப்பியது. ரேகா அழுது கொண்டே பெட்டில் உட்கார்ந்திருந்தாள். பைரவ் மெல்ல நடந்து வந்தான் வாயில் கஞ்சா சிகரெட்டுடன். மெல்ல அவளுக்கு கீழ் மண்டியிட்டான். கீழிருந்து மேலாக அவளது கண்ணீர் சிந்தும் முகத்தை பார்த்தான்.
YOU ARE READING
வன்மம் 18+
Actionஇது ஒரு பாவக்கதை. இளகிய மனம் கொண்டவர்கள் படிப்பதற்க்கான கதை அல்ல. முழுக்க, முழுக்க இருள் சூழ்ந்த மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான் இந்தக்கதை. இதில் அதிகப்படியான ஆபாசக்காட்சிகள் வரும் காரணத்தினால் முன்கூட்டியே எச்சரித்துவிடுகின்றேன் இது திறந்த உள்ள...