42.கஞ்சாவின் கதை.

7 0 0
                                    

வானில் கழுகுகள் வட்டமிட ஆரம்பித்தது. கீழே எதிரில் 30 பேர். இங்கே இரண்டு நபர்கள் மட்டுமே நின்று கொண்டிருக்கின்றார்கள். டேவிட் பதட்டத்துடன் பைரவ்-யை பார்த்துக்கொண்டிருந்தார். பைரவ் மெல்ல சிரித்துக்கொண்டே கையில் இருந்த பெட்ரோலை கீழே படுத்துக்கொண்டிருந்த மன்னிக்கவும் வலியில் துடித்துக்கொண்டிருந்த மூவரின் மீதும் ஊற்றினான். வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் அப்படியே ஒரு நிமிடம் நின்றார்கள். டேவிட்டின் கையில் இருந்த பெட்ரோலையும் வாங்கினான். லட்சுமணனை மெல்ல எழுப்பி உட்கார வைக்க சொன்னான் டேவிட்டிடம். லட்சுமணனின் மண்டையில் அந்த பெட்ரோல் பாட்டிலை டம்மென்று உடைத்தான். அவன் சுயநினைவை இழந்து அப்படியே படுத்தான். அந்த 30 நபரும் பைரவை நெருங்கி வர பயந்தார்கள். தனது பாக்கெட்டில் இருந்து லைட்டரை எடுத்தான்.
கூட்டத்தில் இருந்து ஒருவன் வெளியே வந்தான். நன்கு தடிமனான உருவம். இடது கண் மூடியே இருந்தது.வலது கண்‌‌ மட்டும் திறந்திருந்தது. கஞ்சா மட்டும் மாத்திரை போதையில் பறந்து கொண்டிருந்தான். வலது கையில் கஞ்சா இலையை பச்சை குத்தி வைத்திருந்தான். நன்கு சுருட்டை முடி. பாக்ஸ் கட்டிங் போட்டு மண்டையின் நடுவே செம்பட்டை நிறத்தில் சுருட்டை முடி. ஒரு யானை நிறத்தில் ஜீன்ஸ் பேண்ட் ஒரு நீல நிறத்தில் ஒரு சட்டை. கையில் கலர்‌‌ கலர்‌‌ பேண்டுகள். ஒரு பெரிய கத்தியோடு நின்றான்.

டேவிட்: இவன் தான்டா தேசிங்.

மெல்ல பைரவ் அவனை பார்த்தான். அவன் கொடூர கோபத்தோடு பைரவ்-ஐ பார்த்தான்.

தேசிங்: டேய் கோத்தா. என்ன ஃபிலீம் புண்ட காட்டுறியா. இன்னைக்கு இரண்டு பேரும் இங்க சமாதி ஆகப்போறிங்கடா.

என்று சற்று‌ பதட்டத்துடன் கத்தினான்.

பைரவ்: சரி நா சாக ரெடி. ஆனா என்கூட சேர்ந்து இப்போ இந்த மூணு பேரும் சாகப்போறானுங்க.

தப்பித்து சென்ற இருவரில் ஒருவன்.

அவன்:  தேசிங்கு அவன் மெண்டல் கூதி டா. செஞ்சாலும் செஞ்சுருவான்டா.

வன்மம் 18+Donde viven las historias. Descúbrelo ahora