68.தனிமையிலே இனிமை காண முடியுமா?

21 1 0
                                    

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்...

இறைவன் பெரிய பெரிய பாறைகளை அழகாக செதுக்கி அதற்க்கு பச்சை நிற வண்ணம் பூசியது போல். மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள் ஆகியவற்றால் அந்த மலைத்தொடரை அவ்வளவு அழகாக காட்சியளித்தது. கண்ணிப்பெண்களின் இடையை விட இந்த மலைகளில் வளைவுகள் நேர்த்தியாகவும், சுவராஸ்யமாகவும் செதுகப்பட்டிருந்தது. பாதி தமிழ்நாட்டையும், பாதி கேரளாவையும் பிரிக்கும் மலைத்தொடர். இறைவன்‌ இல்லையென்று சொல்லும் அனைவரும் இந்த இடத்தை பார்க்கும்போது உணர்வார்கள் இறைவன் இரகசிய இருப்பிடம் இயற்கை என்று. இந்த மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி. கம்பம் மெட்டு...

நல்ல அடர்ந்த வானுயுர்ந்த தேக்கு மரங்கள், பெரிய‌ ஆலமரங்கள், விதவிதமான செடிகள் அனைத்தும் பச்சை பசேலென்று பார்ப்பதற்கு ஆத்மாவிற்க்கு ஆனந்தத்தை உண்டு பண்ணியது. மெல்ல மழைச்சாரல் அவ்விடத்தில் விழத்தொடங்கியது. பசுமைக்கு மேலும் அந்த மழை புதுமை கொடுத்தது. சற்று குளிர் காற்றும் நமது ஆன்மாவை வருடிச்செல்கின்றது. அந்த அடர்த்தியான வனப்பகுதிக்குள் மான்கள், காட்டுமாடுகள், காட்டுப்பன்றிகள், முயல்கள், சிறுத்தைகள் உலாவிக்கொண்டிருந்தன. இறைவன் இரகசியமாய் இருக்கும் அந்த இடத்தில் இரகசியமான ஒரு இடம். பெரிய பரப்பளவில் செடிகள் ஈரக்காற்று பாடும் பாடலுக்கு ஏற்றார் போல இசைந்து கொண்டிருந்தது. அந்த செடியின் இலைகளை இறைவன் இரசித்து, இரசித்து இரகசியமாய் செதுக்கியிருப்பான் போல. அது ஒரு மிகப்பெரிய கஞ்சா தோட்டம். இரண்டு, மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஐந்தடிக்கு வளர்ந்துள்ள கஞ்சா செடிகள். பார்ப்பதற்கு பிதாமகன் படத்தில் வரும் கஞ்சா தோப்பு போல இருந்தது. அந்த கஞ்சா செடிகளை மூங்கிலுக்குள் குத்திக்கொண்டிருந்தார்கள். அதில் சிறிதளவு தேனை ஊற்றினார்கள். மேற்கு தொடர்ச்சி மலைகளில் கிடைக்கும் மலைத்தேன். அதனை அந்த மூங்கிலுக்குள் ஊற்றினார்கள். கஞ்சா இலைகளுடன் அந்த தேன் நன்றாக கலந்து மூங்கிலுக்குள் அடைந்து கிடந்தது.  ஐம்பது வயதுமிக்க ஒரு நபர் அங்கே ப்ளன்ட் பேப்பரில் சுற்றி புகைத்துக்கொண்டிருந்தார். அந்த மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை இரசித்த வண்ணம். அதிகமான நரையும், குறைவான கருப்பும் கலந்த தாடி மற்றும் முடி. நன்றாக எண்ணெய் தேய்த்து வகுடு எடுத்து சீவப்பட்ட முடி. சற்று பருமனான உடல். ஒரு கதர் ஜிப்பா ஒரு வெள்ளை வேஷ்டி கட்டிக்கொண்டு ஒரு மர நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். உடலில் எந்த ஆபரணங்களும் இல்லை. கண்ணில் ஒரு கண்ணாடி. பார்க்க ஒரு ஐம்பது வயது நபர் போல இருந்தார். அவர் முன்பு தேசிங்கு நின்று கொண்டிருந்தான் தனது கைகளை கட்டிக்கொண்டு. இரண்டு டம்ளரில் டீ கொண்டு வரப்பட்டது. ஒன்றை அவர் எடுத்துக்கொண்டார் மற்றொன்றை தேசிங்கு எடுத்துக்கொண்டான்.அவர் அருகே இருந்த ஒரு கருப்பு ரேடியோவில் பாடல் ஓடத்தொடங்கியது...

வன்மம் 18+حيث تعيش القصص. اكتشف الآن