என்ன சிந்திப்பது எப்படி சிந்திப்பது என்று பைரவால் எதையும் சிந்திக்கமுடியவில்லை. அவனது நியூரான்கள் எலக்ட்ரான்களை கடத்திக்கொண்டு இருந்தது. ஆனால், எந்த ஒரு வாய்ப்பையும் சிந்திக்கமுடியவில்லை.
பைரவ்: என்ன மறச்சிங்க திவ்யா?
அவனது தொண்டை அடைத்தது வார்த்தைகள் வாயில் இருந்து வரண்டு போய் வெளியே வந்தது.
திவ்யா: கோச்சுக்காத பைரவ். இத நேத்து இருந்து உன்கிட்ட சொல்லனும்னு தான் நினைச்சுட்டு இருந்தேன். இத சொன்னா எப்படி எடுத்துப்பன்னு எனக்கு தெரியல.
அவளது வார்த்தையில் தடுமாற்றம் அவனது ஆத்மாவை தள்ளாட செய்தது. மெல்ல இழுத்து பைரவ் பெருமூச்சிட்டான்.
பைரவ்: எதுனாலும் சொல்லுங்க. உயிரோட இருந்தும் பிணமா தான் இருக்கேன்.
என்று சொல்லிவிட்டு தன்னுள் அழுதுகொண்டிருக்கும் குழந்தையின் குரல்வளையை அவனுள் உருவாக்கிய சாத்தான் நெறித்துக்கொண்டிருந்தது.
திவ்யா: உன்னோட அப்பா & அம்மா பாடிய மெடிக்கல் காலேஜ் எடுத்துக்கல. நீ சையின் பண்ண பேப்பரும் அதுக்கானது இல்ல.
கடலில் இருந்து வெப்பத்தினால் நீராவியாகி மேலே சென்று திரளாக மாறி மேகங்கள். அவற்றுள் இருக்கும் நீர் மூலக்கூறுகளில் மேகத்தின் மேல் பரப்பில் இருக்கும் கடினமான பாசிட்டிவ் எலக்ட்ரான்களும், கீழ் பரப்பில் இருக்கும் எலக்ட்ரான்களும் உராய்வின் காரணமாக ஏற்படுத்தும் மின்னல் அவனது மூளையினுள் இருக்கும் நியூரான்களில் எல்கட்ரான் பரிமாற்றத்தால் நிகழ்ந்தது. ஒளியின் வேகம் ஒலியின் வேகத்தை விட அதிகம் என்பதால் அவனது மூளையில் விழுந்த மின்னலின் சத்தம் அவனது இதயத்தில் இடியாய் வெடித்தது. மேகத்தில் இடி,மின்னல் ஏற்படும் போதும் 30,000 டிகிரி செல்சியஸை ஏற்படுத்துவது போல. அவனது உடல் முழுவதும் ஒருவிதமான வெப்பத்தை ஏற்படுத்தியது அவன் மனதில் விழுந்த இடி. அந்த மேகம் மழையாக பொழிவது போல் அவன் உடலில் இருந்து வியர்வை சுரக்கத்தொடங்கியது. கொஞ்சம், கொஞ்சமாக அவனுள் இருக்கும் குழந்தை செத்துக்கொண்டிருத்தது. உயிருக்கு போராடும் நிலையில் அக்குழந்தை துடித்துக் கொண்டிருந்தது. மெல்ல மனதில் தெம்பை ஏற்றிக்கொண்டு பேசத்தொடங்கினான்.
YOU ARE READING
வன்மம் 18+
Actionஇது ஒரு பாவக்கதை. இளகிய மனம் கொண்டவர்கள் படிப்பதற்க்கான கதை அல்ல. முழுக்க, முழுக்க இருள் சூழ்ந்த மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான் இந்தக்கதை. இதில் அதிகப்படியான ஆபாசக்காட்சிகள் வரும் காரணத்தினால் முன்கூட்டியே எச்சரித்துவிடுகின்றேன் இது திறந்த உள்ள...