அந்த இரும்பு சுத்தியலை கையில் எடுத்தான். ஆணி அடிப்பதற்கு உபயோகப்படுத்தும் உதவும் சுத்தியல். சற்று கனமாகவும் இருந்தது. அதன் காபி நிறத்தில் இருந்த கைபிடியை இறுகப் பிடித்தான். அப்படியே மெல்ல அந்த அறையில் புறப்பட்டான். சமையல் அறைக்குள் சென்றான். கடப்பாக்கல் பதிக்கப்பட்டிருந்த ஸ்லாப்புகளை பார்த்தான். அதில் சில்வர் சம்படங்களும், பிளாஸ்டிக் டப்பாக்களும் இருந்தது. மளிகை பொருட்கள் அந்த டப்பாக்களில் நிறைத்து வைக்கப்பட்டிருந்தது. மெல்ல ஒவ்வொரு டப்பாவாக துழாவினான். மிளகாய் பொடி இருக்கும் டப்பாவை மெல்ல திறந்தான். அதனுள் இருந்து நெடி அடித்தது. அந்த மிளகாய் பொடி அடைக்கப்பட்டிருந்த சில்வர் சம்படத்தில் 500 ரூபாய் நோட்டு ஒன்றும், 100 ரூபாய் நோட்டு ஒன்றும், 200 ரூபாய் நோட்டு இரண்டும் இருந்தது. மொத்தம் 1000 ரூபாய் எடுத்து தனது இடது பக்க ட்ரவுசர் பாக்கெட்டினுள் வைத்தான்.
வீட்டின் கதவை மெல்ல பூட்டினான். அந்த வீட்டையே இப்பொழுது இருள் சூழ்ந்து கொண்டது. அவனது உள்ளத்தையும் சூழ்ந்து கொண்டது. அந்த சுத்தியலை எடுத்து தனது வான்நீல நிற டீசர்ட்டை தூக்கிவிட்டு ஜாக்கி என்று பால்பச்சை வர்ணத்தில் எழுதப்பட்டிருந்த ஜட்டியினுள் சொருகினான். அந்த சுத்தியல் கச்சிதமாக சொருகி நின்று கொண்டது. மெல்ல தனது நீலமும், வெள்ளையும் கலந்த ஃபிலிப் ஃப்ளாப் செப்பலை அணிந்து கொண்டான். மாடியில் இருந்து கீழே இறங்கினான். ஆனால் இறங்க சற்று கஷ்டமாக இருந்தது உடலெல்லாம் அவ்வளவு வலி மனமெல்லாம் அவ்வளவு ரணம். மெல்ல கீழே வந்தான். தனது வண்டியை தொட்டு பார்த்தான். மெல்ல அதனை ஸ்டார்ட் செய்தான். ரேகா அவனிடம் எங்கடா போற இந்த நேரத்துல என்று கேட்க அவன் எதற்க்கும் பதில் சொல்பவனாக இல்லை. அமைதியாக அந்த வண்டியின் ஆக்சிலேட்டரை திருகினான். வண்டி அப்படியே அமர்ந்தது. பிறகு தான் அவனுக்கு நியாபகம் வந்தது மெல்ல பெட்ரோல் டேங்-ன் இருக்கும் பெட்ரோலை ஆன்/ஆஃப் செய்யவும் பெட்ரோல் இல்லாத சமயத்தில் வண்டியை ரிசர்வில் போட உதவும் அந்த திருகியை பார்த்தான். அதனை பெட்ரோல் ஆன் என்று செய்வதற்க்கு ஏற்றார் போல் அதனை கீழ் நோக்கி திருகினான். அந்த இரும்பு கேட் திறக்கப்பட்டிருந்தது. ரேகா அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவனிடம் என்ன பேசுவது என்று அவளுக்கு தெரியவில்லை. கவலை நிறைந்த மெளனம் பார்வை. அந்த பார்வையிலே அவ்வளவு ஏக்கம். என்னோடு வா நான் உன்னை பார்த்துக்கொள்கின்றேன் என்ற காதல் அவளது கண்களில் கண்ணீர் சூழ வைத்து விட்டது. அவன் தனது உணர்வற்ற பார்வையோடு ரேகாவை நோக்கினான். அந்த கண்களுக்கு பின்னால் இருந்த வன்மத்தை அவளால் புரிந்த கொள்ள முடியவில்லை. பைரவ்-ன் உணர்வுகளை யாரால் தான் புரிந்து கொள்ள முடியும். அவனுக்கே அவன் என்ன உணர்வில் இருக்கின்றான் என்பது தெரியாமல் போய்விட்டது.
KAMU SEDANG MEMBACA
வன்மம் 18+
Aksiஇது ஒரு பாவக்கதை. இளகிய மனம் கொண்டவர்கள் படிப்பதற்க்கான கதை அல்ல. முழுக்க, முழுக்க இருள் சூழ்ந்த மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான் இந்தக்கதை. இதில் அதிகப்படியான ஆபாசக்காட்சிகள் வரும் காரணத்தினால் முன்கூட்டியே எச்சரித்துவிடுகின்றேன் இது திறந்த உள்ள...