4.கோழிக்கறி.

77 2 0
                                    

மெதுவாக தன் தலையை திருப்பினான். அங்கே சங்க இலக்கியங்களில் குறிப்பிடுவது போல் தலைவன் தலைவனுக்காக ஏங்கி காத்திருப்பது போல் ரேகா, பைரவ்-ற்க்காக காத்திருந்தாள். அவளை கண்டவுடன் அவனுடைய கரிய இதழ்கள் மெல்ல சிரித்தது. இதயத்தின் உஷ்ணம் தாளாமல் அப்படியே வாயில் இருந்து புகையும் வெளியே வந்தது‌‌. மெதுவாக சிகரெட்டை நன்றாக ஒரு இழு இழுத்தான். முக்கால் வாசி புகைத்த நிலையில் சிகரெட்டை அருகில் இருந்த 1 அடி அகலம் இருந்த சாக்கடையில் தூக்கி எரிந்தான். அந்த சாக்கடை நீர் பட்டு சிகரெட் உஷ்ஷ்ஷ்.... என்ற சத்தத்துடன் உள்ளே மூழ்கியது. தனது தலையை மேலே தூக்கினான். அப்படியே மெல்ல தனது வாயை திறந்தான். வானை நோக்கி புகை கிளம்பியது. காற்றில் ஆத்மா மேலே மெல்ல செல்வது போல அசைந்து, அசைந்தும், சுருள், சுருளாகவும் புகை விண்ணுலகம் சென்றது.

வீட்டினுள் நுழைந்தான் இரும்பு கேட்டை இழுத்து மூடினான். ரேகா அவன் அருகில் வந்து நின்றாள். அவளது Silk thread வளையல்கள் அணிந்த கைகள் Godrej வட்ட வடிவ பூட்டை இரு கதவுகளையும் ஒன்றிணைக்கும் துளைக்குள் மெதுவாக பூட்டின் மேல் இருக்கும் வளையத்தை உள்நுழைத்தாள். அது லாவகமாக அதில் மாட்டிக்கொண்டது. பூட்டின் கீழிருந்து ஒரு அழுத்து அழுத்தினாள். இடது பக்கம் இருந்த பூட்டின் சிறிய துளைக்குள் அந்த பூட்டிக்கொண்டது. சாவியை வலது பக்கம் ஒரு திருப்பு திருப்பினாள். இப்போது பூட்டு பூட்டிக்கொண்டது. ஒரு இழு இழுத்துப்பார்த்தாள். அந்த மிருதுவான மாநிற கைகள் அவ்வேலையை செய்யும் அழகை கண்டு மெய்மறந்து நின்றான் பைரவ். ரேகாவின் சில்க்த்ரெட் வளையல்கள் அணிந்த கைகளை பிடித்தான். அவள் பக்கம் திரும்பினான். நல்ல மினுமினுக்கும் கரிய தலைமுடி. வீட்டில் இருக்கும் போது அலட்சியமாக போடும் அந்த அழகான ஒரு கொண்டை. நெற்றியில் ஒரு சிறிய சிவப்பு நிற கோபுர ஸ்டிக்கர் பொட்டு. அதன் இடது பக்கத்தில் புதிதாய் உருவெடுத்த ஒரு சிறிய பரு. சிவந்தும் சிவக்காமலும் இருந்த கண்கள். வெள்ளை நிற விழிகளில் சிறிதளவு சிவப்பு கலந்த கண்கள். த்ரெட்டனிங் செய்யப்பட்ட புருவங்கள் நன்றாக இடைவெளி விட்டு செதுக்கப்பட்டிருந்தது. நடுத்தர அளவு கொண்ட கண்கள். கண்களின் கீழ் தூக்கமின்மையால் ஏற்படும் கருவையங்கள்,சற்று பெரிய மூக்கு. சிறிய பிங்க் நிற இதழ்கள் அந்த இதழின் இடப்பக்கத்தில் கீழ் உதட்டின் கீழ் ஒரு சிறிய மச்சம். அவளது கன்னங்களில் சிறிதளவு முகப்பருக்கள். இடது பக்கம் சற்று அதிகமாக இருந்தது. அவள் காதுகளில் தங்கத்தோடுகள் தொங்கிக் கொண்டிருந்தது. அந்த மஞ்சள் நிற ஒளிபட்டு அந்த தோடுகள் நன்றாக மின்னியது. எடை கம்மியாக இருக்கும் தங்கத்தோடுகள் அதில் மயில்கள் மிக நுட்பமாக செதுக்கியிருந்தார் பொற்கொல்லர்.

வன்மம் 18+Donde viven las historias. Descúbrelo ahora