44.அது இரகசியம்.

9 0 0
                                    

பைரவ் மெல்ல அந்த பணத்தை பார்த்தான். இருபது ஐநூறு ரூபாய் கட்டுகள். அந்த ஒவ்வொரு ஐநூறு ரூபாய் கட்டிலும் நூறு ஐநூறு ரூபாய் தாள்கள். டேவிட்டை பார்த்து ஹா....ஹா...ஹா...ஹா.... என்று சிரிக்க ஆரம்பித்தான்.

டேவிட்: இந்தாடா உனக்கு எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோ. இது உன்னோட பிளான்.

பைரவ்: நீயே கொடு ப்ரோ.

என்று மெல்ல தனது அறைக்குள் சென்று ஓன் லவ் டீசர்ட்டை மீண்டும் போட்டுக்கொண்டான். அதில் ஒரு பத்து ஐநூறு ரூபாய் கட்டுகளை பைரவ்-ற்க்கு ஒதுக்கினார்.

டேவிட்: இந்த பைரவ் அஞ்சு லட்சம் உனக்கு. அஞ்சு லட்சம் எனக்கு.

என்று பிரித்து வைத்தார்.

பைரவ் உடனே அதில் ஐந்து கட்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டு தனது ரூமிற்க்கு சென்று ட்ராயருக்குள் வைத்தான்.

பைரவ்: எனக்கு இரண்டரை லட்சம் போதும் ப்ரோ. இந்த மிச்சத்தையும் நீயே வச்சுக்கோ. வரப்போற குழந்தைக்கு என்னோட கிஃப்ட்ன்னு வச்சுக்கோ.

டேவிட் எதுவும் பேசாமல் மெல்ல எழுந்து பைரவ்-ஐ கட்டியணைத்தார். அந்த பாக்ஸில் இருந்த பணத்தை ஒரு மஞ்சள் பையில் வைத்தார்கள்.

பைரவ்: எப்படி ப்ரோ பணத்த எண்ணுன?

டேவிட்: வாங்கும் போதே எண்ண ஆரம்பிச்சுட்டேன் டா. கடைசியா வந்துவனுக்களுங்க்கு 300 ரூபான்னு கொடுத்தேன். அதான் பத்து லட்சம் வந்துச்சு.

பைரவ்: ஆனா இந்த ராம் தேவிடியாப்பய உன்கிட்டையே சொறட்ட வேல பாத்துருக்கான் பாறேன்.

என்று பேசிக்கொண்டே இருவரும் கீழே இறங்கி வந்தார்கள். பைக்கில் ஏறி புறப்பட்டார்கள்.

டேவிட்: ஆமா டா. அவன ரொம்ப நம்புனேன். செத்த தேவிடியாப்பய ஏமாத்திட்டான் பாரு. இந்த மாத்திர விசயத்துல எவனையும் நம்பக்கூடாது. அப்ப ஒரு பாக்ஸ் ஐம்பதாயிரம் தான் போல டா.

இருவரும் பேசிக்கொண்டே பீஃப் கடையை வந்தடைந்தார்கள். பீஃப் ஃபிரெய்டு ரைஸ் மற்றும் பீஃப் சில்லி, பீஃப் சுக்கா ஆர்டர் செய்தான். அனைத்திலும் தனித்தனியாக இரண்டு பார்சல் ஒன்று பைரவ்-யிற்க்கு மற்றொன்று டேவிட்ற்க்கு. பைரவ் பணம் கொடுப்பதற்க்கு முன்பாக டேவிட் கூகுள் பே-மூலம் பணத்தை கொடுத்து விட்டார். இருவரும் கடைக்கு வெளியே நின்று சிகரெட்டை புகைக்க ஆரம்பித்தார்கள்.

வன்மம் 18+Where stories live. Discover now