மெல்ல தனது பெற்றோரின் அறைக்குள் அடியெடுத்து வைத்தான். தன்னையும் அறியாமல் ஒரு பதட்டம் அவனது இருதயத்தை சூழ்ந்து கொண்டது. மரத்தால் செய்ய அந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் அருகில் போய் நின்றான். அதன் அருகில் ஒரு முருகன் படம் போட்ட காலண்டர் தொங்கிக்கொண்டிருந்தது. மேலே ஓடும் கருப்பு நிற ஓரியன்ட் ஃபேனின் காற்றால் அந்த காலண்டர் பேப்பர்கள் சர்... சர்... என்று அசைந்து கொண்டிருந்தது.அந்த ட்ரெசிங் டேபிளில் இருந்த பேப்பரை கையில் எடுத்தான். பேப்பர் வெயிட்டை எடுத்து அதன் அருகிலேயே வைத்தான். தனது தாயையும், தந்தையும் எழுப்ப முயற்ச்சிக்கும்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டது. வேகமாக அந்த பெட்ரூமில் இருந்து வெளியே வந்தான். வெளியே கருப்பு நிற ஷோபா போடப்பட்டிருந்தது. அதன் அருகில் ஒரு ஷெல்ப் இருந்தது அதில் முருகன்,விநாயகர்,லட்சுமி,சரஸ்வதி என நான்கு கடவுளும் ஒன்றிணைந்தார்போல் ஒரு புகைப்படம். அதன் அருகில் ஒரு புத்தரின் சிலை, அதனருகில் ஒரு சிவலிங்கம், அதன் பக்கத்தில் விஷ்ணுவின் புகைப்படம், அதன் அருகே சாய்பாபா சிலை என்று ஜீசஸீ மற்றும் அல்லாவை தவிர அங்கே அனைத்து கடவுளும் இருந்தார்கள். மெல்ல சாவியை இடது பக்கம் இரு முறை சுழற்றி கதவை மெல்ல திறந்தான். வெளியே ரேகா மற்றும் அவளுடைய தாய் இருவரும் நின்று கொண்டிருந்தார்கள். அவளது தாய் சிறிதளவு நரைத்த முடிகளுடன் கண்ணில் தூரப்பார்வைக்காக கண்ணாடி அணிந்திருந்தார். கையில் ஒரு இரண்டு வயதே ஆன பெண்குழந்தை. ஒரே ஒரு குட்டி ஆரஞ்சு நிற கெளவுன் மட்டும் போட்டிருந்தது அதில் குட்டி குட்டி வெள்ளை பூக்கள். ரேகா நன்றாக குளித்து சிவப்பு நிற நைட்டி ஒன்றை அணிந்திருந்தாள். அதில் பொம்மலாட்ட பொம்மைகள் வெள்ளை நிறத்தில் அழகாக இருந்தன. அவளது தாய் வெள்ளை நிற சேலை அணிந்திருந்தார். அதில் கருப்பு நிறத்தில் பூக்கள் போடப்பட்டிருந்தது. இருவரின் கழுத்தில் தாழியும் இல்லை நெற்றியில் குங்குமமும் இல்லை. கையில் ஒரு பேப்பருடன் பைரவ் நிற்பதை பார்த்த இருவரும் சற்று அதிர்ச்சியடைந்தார்கள். நடு ஹாலில் ஒரு மூங்கில் ஊஞ்சல் தன்னந்தனியாக தொங்கிக் கொண்டிருந்தது. அது அப்படியே மெல்ல முன்னே அசைந்தது. அது காற்றில் அசையும் சத்தம் அந்த இடத்தில் மிகவும் சத்தமாக கேட்டது. ரேகா வின் தாயின் பெயர் அம்பிகாபதி. அவர்களை பார்த்தாலே கையெடுத்து கூப்பிடத்தோன்றும். வயது 58 வது இருக்கும். சற்று மாநிறமாகவும் தடித்த உடலுடனும் இருப்பார்.
ESTÁS LEYENDO
வன்மம் 18+
Acciónஇது ஒரு பாவக்கதை. இளகிய மனம் கொண்டவர்கள் படிப்பதற்க்கான கதை அல்ல. முழுக்க, முழுக்க இருள் சூழ்ந்த மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான் இந்தக்கதை. இதில் அதிகப்படியான ஆபாசக்காட்சிகள் வரும் காரணத்தினால் முன்கூட்டியே எச்சரித்துவிடுகின்றேன் இது திறந்த உள்ள...