16.சாத்தான்களின் பேச்சு.

27 1 0
                                    

மெல்ல தரையில் இருந்து எழுந்தான். ஃபோனை அட்டன் செய்தான். அப்படியே மெல்ல சுவரில் சாய்ந்து உட்கார்ந்தான். பாக்கெட்டில் இருந்து கஞ்சா ஜிப்லாக் பேக்கை எடுத்தான். மெல்ல அதிலிருந்து சிறிது கஞ்சாவை எடுத்து அந்த சிவப்பு நிற கூளிங் கற்கள் பதிக்கப்பட்டிருந்த தரையில் வைத்தான்.

திவ்யா: ஹலோ பைரவ்?

அவள் குரலில் இருந்த கம்பீரம் காணவில்லை. அதற்க்கு பதிலாக வேறு ஏதோ ஒன்று தான் தெரிந்தது. அது என்னவென்று சொல்வதற்வற்க்கான புரிதல் எனக்கில்லை.

பைரவ்: குட் மார்னிங் திவ்யா. ஒரு நிமிஷம்.

என்று சொல்லிவிட்டு தனது ஸ்மார்ட்ஃபோனோடு வெள்ளை நிற ஹெட்செட்டை சேர்த்தான். மெல்ல தனது இடது பாக்கெட்டில் இருந்த லைட்ஸ் சிகரெட் பாக்ஸில் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்தான். பின் பாக்கெட்டில் கைவிட்டு ஒரு பேப்பரை எடுத்தான். அது சிறிய செவ்வக வடிவில் இருந்தது. மெல்ல அந்த வெள்ளை நிற பேப்பரை விரித்தான். அதனுள் RAW OCB பாக்ஸ் இருந்தது. அதன் அருகிலேயே ஒரு சிறிய அளவிளாலான பேப்பர்கள் சற்று தடிமனாக இருந்தது. மெல்லிய அட்டை போல் இருந்தது. வெளிரிய மஞ்சள் நிறத்தில் அதன் பெயர் “ரோச்” என்று சொல்லுவார்கள். மெல்ல அந்த கஞ்சா பீஸ்களை தனது  உள்ளங்கையில் வைத்தான். பார்ப்பதற்கு காய்ந்துபோன கெட்டி இலைகள் போல அவை காட்சியளித்தன. மெல்ல தனது இடது கையில் வைத்து நன்றாக கசக்க ஆரம்பித்தான். அதிலிருந்த குட்டி, குட்டி விதைகளை தூக்கி எறிந்தான். அப்படியே திவ்யாவினிடமும் பேச ஆரம்பித்தான்.

பைரவ்: சொல்லுங்க திவ்யா?

என்றான் அந்த கஞ்சாவை நன்கு துகளாக கசக்கி அந்த வெள்ளை பேப்பரில் கொட்டிக்கொண்டே.

திவ்யா: நேத்து நைட் ஃபோன் ஏன் பாதிலையே வச்சுட்ட?

அவள் குரலை தாக்கியது ஏக்கம்.

பைரவ்: அப்படியெல்லாம் ஒன்னுமில்லைங்க அப்படியே மட்டை ஆகிட்டேன். அதான் வேற எதுவுமில்ல

வன்மம் 18+Where stories live. Discover now