27.ரேகா அக்கா

18 1 0
                                    

மெல்ல லெமன் டீயை உத்தமன் குடித்துக்கொண்டிருந்தார். சிகரெட்டை ஒரு இழு இழுத்தார்.

உத்தமன்: உங்க வீடு ரெண்டு சென்ட். முதல லேண்ட் வேல்யூ இங்க என்னன்னு பாக்கணும்.

என்று மீண்டும் சிகரெட்டை மெல்ல இழுத்தார்.

பைரவ்: எங்க வீடு ரெண்டு சென்ட் அங்கிள். ஒரு சென்ட் 7 லட்சம் எங்க ஏரியால.

என்று மெல்ல லெமன் டீயை குடித்துக்கொண்டே உத்தமனை பார்த்தான்.

உத்தமன்: இரண்டு சென்ட் 14 லட்சம்ன்னு வச்சுப்போம்‌.

என்று சிகரெட்டை மெல்ல இழுத்து வெளியே ஊதினார் உத்தமன்.

பைரவ்: அப்போ வீட்டோட வேல்யூ எவ்வளவு வரும்.

சிகரெட்டை வாயில் வைத்து மெல்ல இழுத்துக்கொண்டே கேட்டான்.

உத்தமன்: டேய் என்னைக்கும் கட்டுன வீட்ட விற்க்கும் போது ஸ்கொயர் ஃபீட் கணக்கு தான் பாக்கணும். சென்ட் கணக்கு அவ்வளவோ பார்க்கக்கூடாது.

என்று தனது லைட்ஸ் சிகரெட்டை மெல்ல இழுத்தார்.

பைரவ்: ஹா. Units பத்தி எனக்கு கொஞ்சம் தெரியும். 1 செண்ட் வந்து 435.56 ஸ்கொயர் ஃபீட். அப்போ ரெண்டு சென்ட்‌ னா?

என்று மெல்ல சிகரெட்டை வாயில் வைத்து இழுத்தான்.

உத்தமன்: கால்க்குலேட்டர்-ல போடு.

என்று லெமன் டீயை குடித்துக்கொண்டே சொன்னார்.

பைரவ்: அதெல்லாம் தேவையில்ல. 435.56 × 2 =

என்று மெல்ல சிகரெட்டை மெல்ல இழுத்தான்.

உத்தமன்: நான்‌ சொல்லவா?

என்று உத்தமன் தனது சிகரெட்டை கீழே போட்டு மிதித்துக்கொண்டே கேட்க.

பைரவ்: 871.12 ஸ்கொயர் ஃபீட் கரைக்ட்-ஆ?

என்று சிகரெட்டை முழுவதுமாக இழுத்துவிட்டு கேட்டான் உத்தமனிடம். உத்தமன் மெல்ல சிரிக்க ஆரம்பித்தார்.

உத்தமன்: இப்பவும் அதுதான்டா சொல்லுவேன். உன்ன வீட்டுல வச்சு வேஸ்ட் பண்ணிட்டாங்க. படிக்க வைக்காம வேஸ்ட் பண்ணிட்டாங்க டா.

வன்மம் 18+Where stories live. Discover now