30.காளியம்மா பாட்டி.

10 1 0
                                    

இருவரும் அப்படியே புறப்பட்டார்கள் ஒயின் ஷாப்பை நோக்கி. வழக்கம் போல ஒயின் ஷாப் சென்று விட்டு திரும்பி வரும் போது பைரவ் கஞ்சா வாங்க புறப்பட்டான். தேவதானப்பட்டியில் இருந்து‌ வண்டி வந்து கொண்டிருந்தது. மெல்ல ஸ்டேட் பேங்க் காலணிக்குள் வண்டியை விட்டான்.

உத்தமன்: என்னடா‌ இதுக்குள்ள விடுற?

பைரவ்: காளியம்மா பாட்டிக்கிட்ட வாங்கணும்.

என்று வண்டியை கரடுமுரடான பாதையில் ஓட்டிக்கொண்டு சென்றான். சற்று குண்டும் குழியுமாக இருந்தது. அப்படியே இடது பக்கம் திருப்பி ஒரு சந்தில் வண்டியை விட்டான். நல்ல இரண்டு மாடிக்கட்டிடங்கள். பெரும்பாலும் முஸ்லீம்கள் தான் அந்த தெருவில் அதிகமாக இருந்தார்கள்.

உத்தமன்: ஒரு காலத்துல வெறும் தோப்பும், காடா இருந்த இடம் இன்னைக்குப்பாரு எவ்வளவு டெவலப் ஆகிடுக்குன்னு.

என்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே வந்தார்.

பைரவ்: இந்த ஏரியால நிறையப்பேர் ஃபாரின் ரிட்டர்ன் தான். Gulf பக்கம் சம்பாரிச்சுட்டு இங்க வந்து செட்டில் டவுன் ஆனவங்க.

மெல்ல கஞ்சா வாங்கும் இடத்தை அடைந்தார்கள். ஒரு இடிந்த வீடு. அதன் வெளியே ஒருவன் ஒரு ஃபுல் பாட்டிலில் பாதியை குடித்துவிட்டு பாதியை கையில் வைத்திருந்தான். அவன் கையில் வைத்திருந்தது ஜாக்டேனியல்ஸ் பாட்டில் என்பது தான் இருவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஒரு அழுக்குக்கைலி கையில் விலையுயர்ந்த சாராய பாட்டில். மொட்டை அடிக்கப்பட்ட தலை. அவன்‌ அருகில் ஒருவர்‌ வெள்ளை பனியன் மற்றும் வெள்ளை வேஷ்டி கட்டிக்கொண்டு அவனிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.

பைரவ்:இங்கையே நில்லுங்க நான் போய் வாங்கிட்டு வந்துடுறேன். நிறைப்பேர் அந்தப்பக்கம் வந்து போய்க்கொண்டு இருந்தார்கள். மக்கள் நடமாடும் ரோடு தான். பைரவ் மெல்ல அந்த நபரை பார்த்தான். சற்று தடிமனான உருவம் கஞ்சாவால் சிவந்து போன கண்கள். கஞ்சாவால் உருவாகும் கலக்கமற்ற சிரிப்புடன் அவனை பார்த்து மெல்ல சிரித்தார்.

வன்மம் 18+Donde viven las historias. Descúbrelo ahora