ராகுல் மெல்ல தனது கண்களை முழித்தான். "கோயம்புத்தூர் மாநகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது" என்று பச்சை நிற பலகையில் வெள்ளை நிறத்தில் எழுதியிருந்தது. மெல்ல வண்டியில் இருந்து இறங்கினான். உக்கடம் பேருந்து நிலையம் என்று எழுதப்பட்டிருந்தது. நல்ல விடியற்காலை நேரம். இருளடர்ந்த வானத்தில் நீல நிறம் கொஞ்சம் கொஞ்சமாக பரவிக்கொண்டிருந்தது. வானில் நட்சத்திரங்கள் ஜொலிப்பதை விட அந்த பேருந்து நிலையம் நன்றாக ஜொலித்துக்கொண்டிருந்தது. மெல்ல தனது ஸ்மார்ட் வாட்ச்-ல் மணியை பார்த்தான். மணி 4:52 என்று காட்டியது. தண்ணீர் பாட்டிலில் தனது முகத்தை கழுவினான். பைரவ் தனது ஹெல்மெட்டை கழட்டினான். தனது தலையை மெல்ல வண்டியின் கண்ணாடியை பார்த்து வருடிக்கொண்டிருந்தான். தலையை சரிசெய்து கொண்டிருந்தான். அருகில் பழனி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை செல்லும் பேருந்துகள் நின்று கொண்டிருந்தது. நியூஸ் பேப்பர்கள் அனைத்தையும் பிரித்துக்கொண்டு சிலர் உட்கார்ந்திருந்தார்கள். பைரவ் அவனிடம் இருந்து தண்ணீர் பாட்டிலை வாங்கி மெல்ல அவனுடைய முகத்தை கழுவினான். அப்படியே மெல்ல தென்றல் காற்று அவனது முகத்தை தழுவிச்சென்றது. மெல்ல ஆக்சிஜனை சுவாசித்தான்.அப்படியே கோயம்புத்தூரை பார்த்தான். சிறுவயதில் பார்த்தது போல் இல்லை நிறையவே மாறியிருப்பதை கவனித்தான். ராகுல் மெல்ல தனது முகத்தை துடைத்துக்கொண்டே...
ராகுல்: என்ன ப்ரோ உக்கடம் பஸ் ஸ்டாண்டுக்கே வந்துட்டிங்க?
கேட்டான். சிறுவயதில் தன் தாய்,தந்தையுடன் இங்கு வந்த நினைவுகள், இங்கிருந்து தனது மாமா வீட்டிற்க்கு பேருந்தில் செல்லும் நினைவுகளால் நிம்மதியை இழந்து கொண்டிருந்தான் பைரவ்.
பைரவ்: சும்மா தான் ப்ரோ.
என்ற வார்த்தைக்கு மேல் அவனால் எதுவும் பேசமுடியவில்லை. கண்களில் கண்ணீர்த் துளி போல அவன் முகம் கழுவிய தண்ணீர் துளிகள் அவன் சிவந்த கண்களில் இருந்து வடியத்தொடங்கியது. மெல்ல தனது டீசர்ட்டை தூக்கி தனது முகத்தில் வடிந்த கண்ணீராக வடிந்த தண்ணீரை துடைத்தான் பைரவ். அப்போது திடீரென்று
BẠN ĐANG ĐỌC
வன்மம் 18+
Hành độngஇது ஒரு பாவக்கதை. இளகிய மனம் கொண்டவர்கள் படிப்பதற்க்கான கதை அல்ல. முழுக்க, முழுக்க இருள் சூழ்ந்த மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான் இந்தக்கதை. இதில் அதிகப்படியான ஆபாசக்காட்சிகள் வரும் காரணத்தினால் முன்கூட்டியே எச்சரித்துவிடுகின்றேன் இது திறந்த உள்ள...