இருள் சுழ்ந்த சிறை. மூலையில் ஒருவன் குத்தவைத்து உட்கார்ந்து இருந்தான். இருளில் அவன் முகம் சுத்தமாக தெரியவில்லை. பைரவ்-ன் கண்களுக்கு அவன் மங்கலாக தெரிந்தான். உற்றுப்பார்த்த பிறகு அவனது முகம் சற்று பரிட்சையமாக இருந்தது. வெறும் உள்ளாடை மட்டும் போட்டவாறு உட்கார்ந்து இருந்தான். மெதுவாக எழுந்து அவன் அருகில் வந்தான். எஸ்-கே-சி என்று அவனது நீல நிற பாக்கெட் ஜட்டியில் கருப்பு நிறத்தில் எழுத்துக்கள் பொரிக்கப்பட்டிருந்தது. அவன் கிட்டே வரவும் தான் அவனது முகம் தெளிவாக தெரிந்தது. நன்கு சுருண்ட முடிகள், ஒட்டிய கன்னங்கள், சிவந்த கண்கள், ஆட்டுத்தாடி போல சிறிதாக அவன் நாடியில் தாடி, நல்ல கருத்த உடல், சற்று மஞ்சள் பிடித்த பற்கள். அதில் கீழ் தாடையில் இருந்த வெட்டுப்பற்க்கள் இரண்டை காணவில்லை, நல்ல குச்சி போன்ற தேகம், பார்க்க டி-பி நோய் வந்தவன் போல் இருந்தான். பைரவ் உணர்வுகள் எதுவில்லாமல் கண்களில் கண்ணீர் எதுவுமில்லாமல் அப்படியே படுத்துக் கிடந்தான். நீல நிற பெயின்ட் அடித்த அறை. சுவரில் இருந்த நீலநிறத்தை இருள் பாதி விழுங்கியிருந்தது. பைரவ்-ன் முகத்தையே அவன் அருகில் குத்தவைத்து பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன்: நண்பா... நண்பா...
என்று பைரவ்-ன் உடலை உசுப்பினான்.பைரவ் அப்படியே கையை தரையில் ஊண்டி தனது உடலை பின்பக்கம் இழுத்தான். அப்படியே சுவரில் சாய்ந்து உட்கார்ந்தான். அவனது முகம் மாநிறமாக இருந்தாலும் உடல் சற்று வெண்மையாகவே இருந்தது. உடல் முழுவதும் கருப்பு, கருப்பாக கோடுகள். வெறும் சிமெண்ட் நிற ஜாக்கி ஜட்டியுடன் உட்கார்ந்திருந்தான். அவனது தொடைகளிலும் கருப்பான கோடுகள். முதுகு முழுக்க தடம் பதிக்கப்பட்டிருந்தது. வாயிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. தனது கையால் வாயில் வடியும் இரத்தத்தை துடைத்தான். ஒரு துப்பு துப்பினான். உடம்பு முழுக்க ரணம். அதைவிட மனம் முழுக்க ரணம். இந்த உலகத்தை இது நாள் வரையில் எவ்வளவு வெறுத்தானோ அதைவிட கொடூரமாக வெறுத்தான். வாயில் இருந்த எச்சிலுடன் சேர்ந்து இரத்தம் வடிந்தது. தனது கையால் துடைத்தான். அவனை அருகில் இருந்தவன் அப்படியே பேயை பார்ப்பது போல பார்த்துக்கொண்டிருந்தான்.
ESTÁS LEYENDO
வன்மம் 18+
Acciónஇது ஒரு பாவக்கதை. இளகிய மனம் கொண்டவர்கள் படிப்பதற்க்கான கதை அல்ல. முழுக்க, முழுக்க இருள் சூழ்ந்த மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான் இந்தக்கதை. இதில் அதிகப்படியான ஆபாசக்காட்சிகள் வரும் காரணத்தினால் முன்கூட்டியே எச்சரித்துவிடுகின்றேன் இது திறந்த உள்ள...