10.ஹே பைரவ்.

21 1 0
                                    

பாவப்பட்ட ஒரு உயிரினத்திற்க்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவளது கண்கள் காட்டிக்கொடுத்தது. இவன் என்ன உதவிகேட்கப்போகின்றான் என்ற எண்ணமும் அவளது வக்கீல் மூளையில் சற்று சுதாரிப்பையும்  ஏற்படுத்தியது. இரு எண்ணங்களின் போர் அவளது உள்ளத்தை ஏதோ செய்து கொண்டிருந்தது.

திவ்யா: என்ன கெல்ப்?

உதவி எண்ணத்துடனும். சற்று சுதாரிப்பு எண்ணத்துடனும்.

பைரவ்: கையில ஒரு ரூபா கூட இல்ல. கானா விலக்கு போகணும். என்ன நம்பி யாரும் பணம் கொடுக்க மாட்டாங்க. அதுனால தான் எங்க சொந்தக்காரங்க கூட வரல. எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியல‌. நான் யாருகிட்டையும் கைநீட்டி காசு வாங்குணது இல்ல. உங்க கிட்ட கேட்க கொஞ்சம் சங்கடமா இருக்கு. ஒரு ரூபா இருந்தா கொடுங்க. நான் சீக்கிரம் திருப்பி குடுத்துற்றேன். அப்பா & அம்மா பாடிய என்ன பண்ணுறதுன்னு கூட தெரியல. அவங்கள பாக்கணும் கடைசியா. பந்தல் போடணும், எக்கச்சக்கமான செலவு இருக்கு. என்ன நம்பி யாரும் பணம் கொடுக்க மாட்டாங்க‌. அதான் பேசாம அங்கேயே எரிச்சுடலாம்ன்னு நினைக்குறேன். எங்க வழக்கப்படி புதைக்கணும் எனக்கு வேற வழி தெரியல.

திவ்யாவிற்க்கு அவளையும் அடக்க முடியாமல் கண்ணீர் கண்களில் இருந்து வடிந்தது. கண்களில் வடியும் கண்ணீரை துடைத்துக்கொண்டாள். இருவரும் மெல்ல எழுந்து சென்றார்கள். திவ்யா 100 ரூபாய் பணத்தை கடைக்காரரிடம் கொடுத்தாள். இருவரும் வெளியே வந்து நின்றார்கள். நல்ல இரவு நேரம்  8 மணியாவது இருக்கும். இன்று அமாவாசை என்பதால் நட்சத்திரங்கள் மட்டும் இருள் சூழ்ந்த வானில் மின்னிக்கொண்டிருந்தது. நல்ல விசாலமான தார் சாலை. குறைந்தது 100 மீட்டர் அகலத்திற்க்கு குறையில்லாமல் இருக்கும். பைக்குகளிலும், கார்களிலும் மக்கள் சென்று கொண்டிருந்தார்கள். டீயூப் லைட் பொருத்தப்பட்ட வெள்ளை நிற தெருவிளக்குகள். அந்த தேனீர் கடையில் சற்று கூட்டமாக தான் இருந்தது. வேலை முடிந்த பின் பலர் வந்து டீ, காஃபி என குடித்துக்கொண்டு பெண்களை விட ஆண்கள் புறணி அதிகமாக பேசிக்கொண்டிருந்தார்கள். விதவிதமான மனிதர்கள் ஜாதி, மதம்‌ என பாராமல் அனைவரும் ஒரே இடத்தில் நின்று கிரிக்கெட், அரசியல், வான்நிலை, சினிமா நட்சத்திரங்கள், என்று வாழ்க்கைக்கு தேவையில்லாத பலர் பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் டீ மற்றும் காஃபி குடித்துக்கொண்டு சிகரெட் புகைத்துக்கொண்டு வாழ்க்கைக்கு தேவையானதை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். கோல்ட் ஃபில்டர், சிசர் ஃபில்டர், மினி ஃபில்டர், கிங்ஸ், லைட்ஸ், சைய்யது பீடி, 10ஆம் நம்பர் பீடி, மலபார் பீடி என்று வகை வகையாக புகைத்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வகையான சிகரெட் புகைப்பவர்களும் ஒவ்வொரு வகையாக இருந்தார்கள். உயிரைக்கொல்லும் சிகரெட்டிலும் ஏற்றத்தாழ்வு.அவர்கள் சிகரெட்டில் இருந்து வந்த புகை அப்படியே பால் கொதித்துக்கொண்டிருந்த பெரிய சைஸ் அலுமனிய வட்டகையின் மேல் வந்துகொண்டிருந்த புகையோடு நிக்கோட்டின் புகையும் கலந்தது. அது அப்படியே அருகில் கொதித்துக்கொண்டிருந்த தேனீரில் இருந்த புகையோடும் கலந்தது. இதனால் தான் என்னவோ இந்த கடையில் டீ மற்றும் காஃபி மிகவும் மயக்கமும் வண்ணத்தில் உள்ளதோ.

வன்மம் 18+Wo Geschichten leben. Entdecke jetzt