6.நான் தான் நீ, நீ தான் நான்.

53 1 0
                                    

இந்த இருள் இவனை எங்கோ இழுத்துச்செல்கின்றது. அந்த இருள் அவனை கரிய இருளுக்குள் தள்ளுகிறது. இமைகளால் இருளைத்தவிர வேறு எதனையும் பார்க்க முடியவில்லை. இந்த அந்தகாரத்தில் அனாதையாக அலைந்துகொண்டிருக்கின்றது இவனுடைய ஆத்மா. மேலே சடார் என்று சிவப்பு நிற வெளிச்சம் தெரிந்தது. மெல்ல அந்த வெளிச்சத்தை நோக்கி அன்னாந்து பார்த்தான். அவ்விடத்தில் இருந்த புவியீர்ப்பு விசை காணாமல் போனது. அவன் அவ்விடத்தில் மிதக்க ஆரம்பித்தான். அப்படியே அந்த சிவப்பு நிற வெளிச்சத்தை நோக்கி காற்றில் நீந்தி, நீந்தி சென்றான். அது உடலா, ஆன்மாவா என்ற சந்தேகம் அவனது நினைவுகளை குழப்பியது. அப்படியே அந்த இடமும் சுழல ஆரம்பித்தது அவனது உடலோடு சேர்ந்து. அந்த வெளிச்சமும் சுழல ஆரம்பித்தது. அவனது உடல் வலது பக்கமாக சுற்ற அந்த இடமும், வெளிச்சமும் இடது பக்கமாக சுழல ஆரம்பித்தது. இவனது தலையும் சுற்ற ஆரம்பித்தது. அந்த இருளும், சிவப்பு நிற ஒளியும் ஒன்றிணைந்து ஹிப்னாடிசம் செய்ய உதவும் கருப்பும் ,வெள்ளையும் கலந்த சுழல் போல சிவப்பும்,கருப்பும் கலந்த சுழல் அவன் கண் முன்னே சுழன்று கொண்டிருந்தது. மெல்ல அவனது உடல் அந்த ஹிப்னாட்டிக் சுழலை நோக்கி சென்றது. கிட்டே செல்ல செல்ல அந்த சுழல் பெரிதாக்கிக் கொண்டே சென்றது. அந்த சுழல் அவனது உடலை அப்படியே விழுங்கியது. அதனுள் மாயமானான். ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..... என்ற பிரபஞ்சத்தின் ஓசை அவனது காதில் உள்ள சவ்வில் பட்டு காதிற்க்குள் உள்ள மனித உடம்பின் மெல்லிய எலும்புகளான இன்கஸ்,மாலியஸ், ஸ்டேப்ஸ் வழியாக அவனது மூளையில் உள்ள நியூரான்களை சென்றடைந்தது. பிரபஞ்சத்தின் தெய்வீக ஓசை கேட்டு கண்களை விழித்தான். வெண்ணிற நிலவின் மீது மிதந்து கொண்டிருந்தான் நிர்வாணமாக. மெல்ல கண்களை திறந்தான். நிலவில் நிற்க முயற்சித்தான். ஆனால், அவனால் நிற்க முடியவில்லை. அங்கிருந்து பூமியை பார்த்தான். அனைவரும் சொல்வது போல ஒரு நீல பந்து போல் காட்சியளித்தது பூமி. நிலவில் அவனால் சுவாசிக்க முடிந்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. உடைகள் எதுவுமில்லாமல் அவனால் அங்கே உலாவ முடிந்தது. நிலவில் மனிதன் இறங்கிருப்பானா என்று தேட ஆரம்பித்தான். அமெரிக்கக்கொடியை தேடிக் கொண்டிருந்தான். நீல் ஆம்ஸ்ட்ராங்-ன் காலடிச்சுவடுகளை தேடிக்கொண்டிருந்தான். திடீரென்று “பைரவ்” என்று கூப்பிடுவது போல ஒரு பெண்ணின் தெய்வீகக் குரல் கேட்டது. அந்த தெய்வீக குரல் கேட்ட திசையை நோக்கி திரும்பினான். வான் நீலமும், நீலமும் கலந்து உடலெங்கும் ஜொலிஜொலிப்புடன் ஒரு பெண் நிர்வாணமாக நின்று கொண்டிருந்தாள். அவளது தலையில் வெள்ளை நிற கூந்தல் ஆடாமல், அசையாமல் அப்படியே மிதந்து கொண்டிருந்தது. அவளை பார்த்தவுடன் நிலவின் வெண்ணிற தரையில் பொத்தென்று விழுந்தான். மெல்ல எழுந்து அவளை பார்த்தான். தங்க நிற கருவிகள் பார்ப்பதற்க்கு பிரபஞ்சத்தில் காணப்படும் நெபுலா போல அவை காட்சியளித்தன. அவளது உடலில் மிகநுண்ணிய அளவில் வெள்ளித்துகள் மின்னியது. அவளது மார்பகம் பார்ப்பதற்கு பெண்ணின் மார்பகங்கள் போலவே இருந்தது. அவளது நிப்பில்கள் தங்க நிறத்தில் ஜொலித்தது. அப்படியே பெண்மை நீல நிறத்திலும் பார்ப்பவரை கவரும் வண்ணம் ஜொலித்தது. அவள் இவனை நெருங்கி வர வர தரையில் அவனது நெஞ்சு வேகமாக துடிக்க ஆரம்பித்தது. அவள் ஒரு விநோத அற்புதம். அவளைக் கண்டவுடன் அவனையும் அறியாமல் அவனது ஆண்மை மெல்ல எழத்தொடங்கியது. தனது இருகைகளாலும் அதை மறைத்துக்கொண்டான். அவள் தனது வெள்ளை இதழ்களால் புன்னகை புரிந்தாள். அவளது பற்கள் வைரத்தால் தான் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவளது புன்னகை ஜொலிஜொலித்தது. அவன் அருகே அவள் வந்து நின்றாள். அவளை கட்டியணைக்க வேண்டும் என்று பைரவ்-ன் மனம் பாடாய் படுத்தியது. பைரவ்-ன் கையை தள்ளிவிட்டு அவனது ஆண்மையில் கைவைத்தாள் அந்த அற்புதப்பெண். அவனது ஆண்மை காணாமல் போனது. இதைப்பார்க்கவும் பைரவ்-ற்க்கு அதிர்ச்சி கலந்த ஆச்சிரியம் ஏற்பட்டது. அங்கிருந்த நகற முயற்ச்சித்தான். ஆனால், ஏனோ முடியவில்லை. கண்களில் பயம், மூளையில் ஏதோ ஏதோ சிந்தனைகள். என்ன செய்வதென்றே தெரியாமல் விழி பிதுங்கி நின்றான். அந்த அற்புதப்பெண் அவனது கைகளை மெல்ல பிடித்து அவளது மினுமினுக்கும் நீல நிற மார்பகங்களில் அவனது இரு கைகளையும் வைத்தால். ஆனால், அவனுக்கு காம உணர்வே வரவில்லை. மெல்ல அவனது வலது கையை கீழே கொண்டுபோய் அவளது பெண்மையில் வைத்தாள். அப்போதும் அவனுக்கு எந்த வித உணர்வும் இல்லை. என்ன இதுவென்று புரியாமல் நின்று கொண்டிருந்தான். அவளது உடலில் வைரத்தை அரைத்து துகள்களாக்கி அவள் உடல் முழுவதும் பூசியிருந்தது அப்படி ஜொலித்தது. அந்த பெண் மெல்ல பைரவ்-ன் இதழ்களில் முத்தமிட்டாள். கரிய இதழ்களுடன் வெண்ணிற இதழ்கள் சேர்ந்தது. இருமைத்தத்துவத்தை இதழ்களை மூலமாக அறிந்து கொண்டான் பைரவ்.அவனுக்கு எந்த வித உணர்வும் ஏற்படவில்லை. உணர்வுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட நிலையில் நின்று கொண்டிருந்தான்.

வன்மம் 18+Where stories live. Discover now