37.சாவு பைரவ்.

12 0 0
                                    

மெல்ல பைரவ் கழுத்தை இறுக்கிக் கொண்டிருந்தான். இறுதியாக கஞ்சா சிகரெட்டை வாயில் வைத்து புகைத்தான். மெல்ல அந்த சிகரெட்‌ கங்கை தட்டி விட்டான். மிக நுண்ணிய தீப்பொறி போல சிகரெட் கங்கு காற்றில் பறந்தது. மெல்ல அந்த மிகநுண்ணிய கங்கு பெரிதாகத்தொடங்கியது. அதையே பைரவ் உற்று நோக்கிக்கொண்டிருந்தான். அது அப்படியே கீழிருந்து மேலே எழும்பியது அப்படியே வளைந்து நெளிந்து ஒரு பெண்ணின் வடிவத்தை உருவாக்கியது. அந்த உருவத்தின் உடல் மெல்ல மஞ்சள் நிற வெளிர் நெருப்பு போல் எரியத்தொடங்கியது. அது ஆதினி தான். தன் பொன்னிற மேனியுடன் நிர்வாணமாக அங்கே நின்று கொண்டிருந்தாள். மெல்ல பைரவ்-ஐ உற்று நோக்கினாள். மெழுகுவர்த்தி-யின் மீது சுடர் போல ஜொலித்துக்கொண்டிருந்தாள் ஆதினி. பைரவ் ஸ்டூலின் மீது நின்றுகொண்டே கழுத்தில் சேலையை இறுக்கியது போல நின்று கொண்டிருந்தான். அவனுக்கு கீழே ஆதினி நின்று தனது தெய்வீக பார்வையால் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஆதினி: என்ன பண்ணுற பைரவ்?

என்று மெல்ல தனது தெய்வீகக்குரலால் அவளிடம் பேசினாள்.

பைரவ்: ரொம்ப போர் அடிச்சிச்சுங்க அதான் ஊஞ்சல் ஆடலாம்ன்னு சேலையில தூரி கட்டி கழுத்துல மாட்டிருக்கேன்.

என்றான் சலிப்புடன் ஆதினியை பார்த்துக்கொண்டே.

ஆதினி: ஓஓ தூரி ஆடவா? சரி‌ பைரவ் நான் வேணா கெல்ப் பண்ணவா நல்லா ஆட.

என்று மெல்ல அவனை நெருங்கி வந்தாள்.

பைரவ்: ஏங்க தூரி ஆடப்போறவங்க இப்படியா தூரி கட்டுவாங்க. நான் சாகப்போறேன்.

என்று மெல்ல கழுத்தின் பின்னால் இருந்து சேலையை இறுக்கினான்.

ஆதினி: ஓ சாகதான் போறியா. சாவு பைரவ். பாப்புளேஷனாவது குறையும்.

என்று மெல்ல அந்த ஸ்டீலில் கைவைத்தாள்.

பைரவ்: ஒரு மனுசன் சாகப்போறேன்னு சொல்லுறேன். அட்வைஸ் பண்ணுவிங்கன்னு நினைச்சா நீங்களே சாக மோட்டிவேட் பண்ணுறிங்க. நல்ல ஆளுங்க நீங்க.

வன்மம் 18+Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin