அன்பே - 6

1.7K 44 4
                                    

பகுதி - 6

மறுநாள் , தாமரையால் எங்கும் அசைந்திருக்க முடியவில்லை . இங்க வந்ததே வேலைக்காக.. அதை பார்க்காமல் இருக்க முடியுமா‌..? மாலை ஐந்து மணிக்கு மேல் ரிச்சர்ட் அவள் இடத்திற்கு வர.. எதுவும் சொல்லாமல் வா என்றதோடு அழைத்து சென்றவன் , ஒரு பெரிய கடையின் முன் நிறுத்தி.. " போ.. உனக்கு என்ன என்ன வாங்கணுமோ வாங்கிக்கோ.." என்றவாறே தன் கார்டை திணிக்க..

" இதெல்லாம் இப்ப எதுக்கு அண்ணா.. எனக்கு எதுவும் வேண்டாம் "

" ம்ச்சு சொன்னா கேளு தாமரை.." என்ற போதும் ,

" வேணாம் வாண்ணே.. நீ எதுக்கோ கூப்பிடறன்னு நினைச்சு வந்தா.." , அவன் முகம் பார்க்க முடியாமல் பராக் பார்த்தவளாய் கூறிக் கொண்டிருக்கையிலேயே... கூம்பியிருந்தவளின் முகம் சூரியனை கண்ட தாமரையாய் பிராகாசிக்க..

" அண்ணே.. அண்ணே.. அது.. அது.. யாரு..? " என்று கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே காரில் ஏறி பறந்துவிட்டான் . அதற்குள் ரிச்சர்ட்டும் அவனை பார்த்துவிட்டதால் ,

" ஏய் தாமரை என்ன ? " என்று கடுப்படித்தாலும்.. உள்ளுக்குள் எழுந்த யோசனையை வெளியிடாத படி ," நேத்து போனோம் இல்ல.. அந்த ஹோட்டலோட முதலாளி.. தமிழ்நாட்டுகாரன் தான் . " அலட்சியமா.. வெறுப்பா.. என்றிருந்தது அவனுடைய குரல் .

" இவரு.. இங்கணயா இருக்காக.. எம்புட்டு நாளாச்சு.. ச்சை.. சரியா பாக்கல.." சிறுபிள்ளையென தாமரையின் குரல் ஒலித்தது .

" அண்ணே.. என்னைய அவியகிட்ட அழச்சுட்டு போறீயளா.. " என்று அவன் முகம் காணமல் சென்ற திசையையே பார்த்தவளாய் கூறியவள் நில்லாமல்.." அப்பாடா.. ஆத்தா நம்மல காப்பாத்திட்டாண்ணே.. அதேன் என் கண்ணுல அவிய விழுந்திருக்காவ.. மித்ரன் ஸார் எம்புட்டு நல்லவரு தெரியுமா.. ஒரே ஒருக்கா நேருல பாத்தேன் .. என் கஷ்டமெல்லாம் பறந்து போயிடும் " என்று கண்களில் ஒளியுடன் சொல்லவும்.. ரிச்சர்ட்டிற்கு ஒன்றுமே புரியவில்லை .

சரண்மித்ரன் பற்றி அவன் அறியாதது ஒன்றுமில்லை.. ஏன் அவனுக்கு சில நேரங்களில் தேவைப்படும் பெண்களை அனுப்பி வைப்பவனும் அவனே.. இன்றும் இவனை தொடர்பு கொண்டிருந்தான் . ஆனால் தாமரையின் பேச்சு அவனுக்கு நெருடலாக இருந்தது . அவனுக்கு அவன் இங்கு வந்தது முதலே பழக்கம்.. ஆனால் அவளுக்கோ அப்படி இல்லை..‌ அதற்கு முன் அவன் இருந்த இடம் நம்ம ஊர் என்பதால் மட்டுமே நிதானித்து அவளது கூற்றுகளை கவனிக்க தொடங்கினான் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now