வா.. வா.. என் அன்பே - 129

987 45 18
                                    

❤️ பகுதி - 129 ❤️

தாமரையின் வார்த்தைகள் நிறைவு பெறுவதற்கு முன்பாகவே , " போகலாம்..", என்று அந்த கட்டிடமே கிடுகிடுக்க செய்யும் அளவுற்கு கர்ஜனையாக வெளி வந்த ஆணின் குரலை நோக்கி , அனைவரின் பார்வையும் திரும்ப , கண்களும் முகமும் சூரியனாய் ஜொலிக்க , மேல் மாடிப் படியில் நின்று இருந்தார் ராம் ப்ரசாத் .

அவரின் இடி முழக்கத்திற்கு வீட்டில் வேலை செய்து இருந்தவர்கள் அனைவரும் அங்கு கூடிவிட ,

" நான் போகலாம்னு சொன்னேன்..", என்று மஹா மற்றும் வீராவின் முகத்திற்காக நேராக மீண்டுமாக கூறிட , முகக்கன்றலுடன் அவமானம் தாளாதவளாய் துடிப்பான வீராவின் கால் நகர துடிக்க , ஆனால் , மஹாவின் பிடி அசையவிடாமல் செய்து இருந்தது‌ .

தாமரையோ , அவரின் சினம் கண்டு திகைத்து விழி நின்றிருக்க.. தம் மாமன் மகள்களை கவனிக்க தவறி இருந்தாள் ‌.

இருவரின் அசையாநிலல மேலும் , ராம் ப்ராசாத்திற்கு கொதிப்பு அடைய செய்யவே , நொடியும் தாமதிக்காதவராய் , " ஃபாத்திமா..", என்று மீண்டும் அவரின் குரல் ஓங்கி எதிரொலித்ததில் , அவர்களை வரவேற்று அழைத்த வந்த பெண்மணி எங்கு இருந்தோ ஓடி வந்து அவர் முன்னால் நடுங்கியவராய் பணிவாக நிற்க ,

ராம் அப்பெண்மணியிடம் என்ன உத்தரவு பிறப்பிக்க நினைத்து இருந்தாரோ , ஆனால் அவர் வாய் மறுபடியும் உறுமுவதற்கு முன்பாகவே , "ஃபாத்திமா.. நீ போ.. எல்லோரும் அவங்க அவங்க வேலைய பாருங்க..", என்று ராமின் குரலுக்கு அரண்டவர்களாக கூடிய இருபதற்கும் மேற்பட்ட வேலையாட்களையும் அகற்றி இருந்தார் பாட்டி அன்னபூரணி .

தன் அன்னையை உறுத்து விழித்தவராக தன் நடையின் வேகத்தை அதிகரித்து வந்தவரின் வேகத்தில் இருவருமே மிரண்டு நின்று இருக்க.. , அன்னபூரணி பாட்டியோ , " ராம்..", என்று அழைத்து தனது அருகே வருமாறு சைகை செய்ய , அவர் பக்கத்தில் அமர வைத்தவர். தாமரை மற்றும் அப்புதிய இரு பெண்களையும் விடுத்து தன் ஜொலிக்கும் விழிகளை மாற்றிக் கொள்ளவே இல்லை . அவர்கள் அரண்டு நிற்க , தாமரையோ துடிக்கும் இதழ்களை கடித்தவளாக , அவர் தன் மீது வைத்து இருக்கும் நேசத்தில் நனைந்து  தனக்குள் மறுகியவளாய் நின்று இருந்தாள் ‌ .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now