❤️ பகுதி - 136 ❤️
தாராவின் பதிலையும் கேட்க நினைக்காதவனாக அழைப்பைத் துண்டித்து தன் துண்டை எடுக்கையில் , மீண்டுமாக வேந்தனின் அழைப்பேசி இசைக்க , சிறு சலிப்புடனே ரிச்சர்ட் எடுத்தான் .
ஆனால் , அது மறுபடியும் அவளது அழைப்பாக இருந்ததில் அதிக எரிச்சல் அடைந்தவன் , காட்டுக்கத்தாய் கத்திட , "ரிச்சர்ட்.. நீங்க ரிச்சர்ட்டா.. " என்று கேட்டதுடன் அல்லாமல் , "தேங்க்ஸ்.. நீங்க செய்த ஹெல்ப்க்கு.. ", என்று நெகிழ்வான குரலில் பேசி சிலையாய் மாற்றி இருந்தாள் .
' இவளுக்கு எப்படி என் பெயர் தெரியும்.. என்று முதலில் குழம்பி பின் அவளுடைய தந்தை கூறி இருக்கலாம் என்று ஊகித்து இருந்தாலும் , பேசுவது நான் என்று எப்படி கண்டுக் கொண்டாள்.. வேந்தனுக்கு கூட தான் அவளை அங்கு அனுப்பியது தெரியாதே ... இவளுடைய அப்பா வேந்தனிடம் பகிர்ந்து இருந்தாலும் அவன் என்னிடம் இதுநாள் வரை கேட்காமல் இருக்க மாட்டானே... அவனுடன் நான் தங்கி இருப்பது இவளுக்கு எப்படி தெரிந்தது ..' என்று அரைவிநாடிக்கு குறைவாக நேரத்திற்குள் ராக்கெட் வேகத்தில் தனக்குள்ளாக அடுக்கிய கேள்விகளுடன் உரைந்து நின்றுவிட..
" நீங்க மட்டும் இல்லேனா.. அன்னைக்கு அந்த ரஞ்..ச..", என்று முழுமையாக சொல்லவிடாமல் ,
" என்ன உளறீட்டு இருக்க.. நான் என்ன ஹெல்ப் பண்ணீனேன்.. ஆங்..", என்று ஏகத்திற்கு கர்ஜித்து இருந்தான் .
அந்தப்பக்கம் , அவனுடைய குரலின் தோரணையில் தாரா அதிர்ந்துவிட்டாலும் ,
" நீங்கதான என்னை ரஞ்சன்கிட்ட இருந்து காப்பாத்தினீங்க.. ", என்று உள்ளடங்கிய குரலில் கேட்கவும் தவறவில்லை .
" யாரு ரஞ்சன்.. ம்ச்சு நீ யாரு.. ", என்று எரிச்சல் மிகுந்ததவன் போலவே சத்தம் போட ,
ஒரு நொடி , அவள் தடுமாறியதில் முத்து முத்தாய் வியர்வைத் துளிகள் , அவளது பூவுடலில் உததயமாகி போனது . ஆனாலும் , அவனுடைய அதே சீறலான குரலில் உடனடியாக தெளிந்தவளுக்கு நிச்சயம் தன் உயிர் வரை ஊடுருவி இருக்கு அவன் குரலை தன்னால் தவறாக அடையாளம் காண முடியுமா... என்று தனக்குள் நிதானித்து இலகுவாய் ,
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...