124

1.2K 48 9
                                    

❤️பகுதி - 124❤️

சரணின் நையாண்டி பேச்சில் முகம் சிவந்தவராய் சந்தீப் , " ஆர். பீ. எஸ்‌‌..", என்று கத்திட ,

சந்தீப்பின் உயர்ந்த குரலுக்கு அடங்காத சரண் மித்ரனோ , நெளிந்த புன்னகையும் , கேலியால் மிணுமிணுக்கும் கண்களுமாய் ,

" எஸ் அஃப்கோர்ஸ் . ஐ ஏம் ஆர் .பீ . எஸ்.. மிஸ்டர் ஷர்மா ..", என்று  கொக்கரித்து , மறுநொடியே , முகம் இறுகியவனாய் , " யூ நோ வாட் . நான் உங்களை எதிர்க்க எப்பவுமே நினைச்சது கிடையாது ‌. அதுனாலேயே , ஐ வுட் லைக் டூ சைன் த டீல்.. பட் , உங்க பையன் அதிகமா சத்தம் போட்டுட்டாரு ‌‌. என் முன்னாடி எதிர்த்து பேசணும்னு நினைச்சாலே பிடிக்காது ‌.. அதுவும் சத்தமா பேசி மாஸ் காட்ட நினைச்சா .. ம்ஹும்..",  தன் தோள்களை குலுக்கி , கீழ் உதட்டை விரித்து , அழுத்தமாக நாற்காலியில் நன்கு சாய்ந்தவனாய் கால் மேல் கால் போட்டுக் கொண்டே சோனியாவை நோக்கி கரத்தை நீட்ட , அவளுக்கு எந்த கோப்பை கேட்கிறான் என்ற சந்தேகம் துளிர்த்தாலும் , அவன் இறங்கும் பொழுது கொடுத்த கோப்பையை திறந்தவளாக நீட்டிட , இரு விரல்களால் அதில் இருந்த காகித்தை உருவியவன்.. அதே தெனாவட்டுடன் நான்காக கிழித்து  குப்பையில் வீசியவனாய் ..

" மிஸ்டர் சந்தீப்.. இப்பவும் சொல்றேன் . நான் உங்களை ( பார்வை அனீஷின் மீது பதிந்து மீண்டவாறே ) எதிரியா இல்லை காம்ப்படீட்டரா கூட நினைக்கலை . பிக்காஸ் , ஐ திங் யு ஆர் கிங் ஆஃப் திஸ் பிஸ்னஸ் . பட் , நாட் லைக் தட்னு யோசிக்க வச்சிட்டாரு மிஸ்டர் அனீஷ் சர்மா ‌. என் பிசனஸ்ல உங்க பையனோட இன்ட்ரப்ஷன் ஸ்டாப் பண்ணீட்டா . இதோட , ஒதுங்கீடுவேன் ‌. இல்லை உங்க வம்சத்தால கூட ஜெம் பெயரை எழுதிப் பார்க்கவும் முடியாத மாதிரி செஞ்சிடுவேன் ‌. அது என்னால முடியும்னு உங்களுக்கே நல்.‌.லா.. தெரியும் னு நினைக்கிறேன்..  ", என்று  அழுத்தம் திருத்தமாக  மென்குரலில் ஆக்ரோஷமாக கூறிய சரணிடம் ,

" டேய்..", என்று சீறி எழுந்த அனீஷை கரம் பிடித்து அடக்கிய சந்தீப்பை பார்வையாளேயே மெச்சியதுடன் ,

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now