வா.. வா.. என் அன்பே - 123

1.2K 48 14
                                    

❤️ பகுதி - 123 ❤️


தாமரை பயிற்சி மேற்கொள்ளும் நிறுவனத்தில் நான்கு நாட்களுக்கு முன்பாக காலையில் விட்டு வந்த பின் , சரண் மித்ரனை ஆக்டோப்பஸ் போல் வேலைகள் இழுத்துக் கொள்ள , அவனால் அவள் நலனைப் பற்றி விசாரிக்கவும் முடியாமல் போனது . உள்ளம் மற்றும் சிந்தனை முழுவதிலும் தாமரையின் நினைப்பு சுழன்றுக் கொண்டே இருந்தாலும் , இரண்டு நிமிடங்கள் கூட ஆசுவாசமாக உரையாட முடியாத சூழலிலேயே இருந்தான் .

அவன் உறக்குவதற்கும் விழிகளை மூடியே நான்கு நாட்களாகி இருந்தது . அவ்வளவு வேலைகள் குவிந்து இருந்ததுடன் அலைச்சல்களும் இருக்கவே , எப்படி அவனால் முடிகிறது என்று வியப்புடனே அவனுடைய உதவியாளர்கள் சுற்றுகிறார் ‌. இன்று , சிறு ஆசுவாசம் அவனுக்கு கிடைத்து இருக்க , அதையும் , அவன் பாப்பாவின் நினைவுகள் விழுங்க , முதலில்.. சுகமான கனவில் மிதந்தவனுக்கு , அன்றைய நாளின் உரையாடல்களும் நினைவிற்கு வந்து அவன் உயிரையே குடிக்கச் செய்ததாய் .

' என்னை வெறுத்திற மாட்டீயளே .. போன்னு சொல்லீற மாட்டீயளே..', என்று தாமரையின் தவிப்பான குரலே எதிரொளிக்க.. கடினமான இரும்பு குண்டை இதயத்தில் வைத்தது போல் சரணின் இரும்பு இதயம் கணத்து கிடந்தது என்று கூறினாலும் குறைவாகவே தோன்றும்.. அந்த அளவிற்கு அவன் நெஞ்சமோ துடித்ததாய் .

ஒவ்வொரு முறையும் அவனின் நேசத்தை உரைக்க , தாமரையின் தவிப்பும் , எதிர்ப்பார்ப்பும் , நிராசையாகி போகுமோ என்னும் அச்சம் நிறைந்த முகமாக மின்னியதை அதிர்வாய் உள்வாங்கியவனுக்கோ , காலம் கடந்து இருந்ததாய் .

அலைபேசியில் மின்னும் மனைவியின் முகத்தையே ஏக்கம் சுமந்தவனாய் வருடியவனுக்கு , மீண்டும் நான்கு நாட்களுக்கு முன் கடைசியாக அவனிடம் பேசிய அவளது குரலே ,

' எனக்கு உங்க  காதலை முழுசா அனுபவிக்கணும்னு ரொம்பவே ஆசையா இருக்கு. ஆனா , அப்போ எல்லாம் பயம்.. இப்போ இந்த வலி , என் ஆசை மட்டும் எனக்கு எப்பவுமே நடக்காது போல..', என்று.. " பாப்பா..ஆ..", என அவன் அறியாமலேயே கதறாலாய் வெளியிட்ட சரணோ நிலைக் கொள்ளாமல் தவிக்க , உடனடியாக மனைவிடம் சென்று விட வேண்டும் என்ற வேகம் பிறந்ததாய் . ஆனால் , சூழ்நிலையோ முற்றிலும் மாறுப்பட்டு இருக்கவே ,வலியை தாங்கியவனாய் ‌.

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now