வா.. வா.. என் அன்பே - 128

882 46 13
                                    

❤️ பகுதி - 128 ❤️

ப்ரியா அதிரடியாக கூறிய செய்தியிலேயே விக்கி திகைத்து , அவளது மர்ம புன்னகையில் மேலும் அதிர்ச்சிக்கு உள்ளானவனாய் . தன் காதல் கூடியதற்கு தன் நல விரும்பி , உயிர் நண்பனான சரண் மித்ரனாக இருக்குமோ என்று நொடிக்குள் யூகித்தவனாய் , " யாரு சரணா..", என்று வினவ ,

" நோ..", என்றாள் விரைவாக , அவள் கூறிய வேகத்திலேயே பொய் சொல்லவில்லை என்று ஊர்ஜிதம் செய்தவன் ,

" அப்புறம்..", என்று கேள்வியாய் நிறுத்த ,

" ம்ச்சு.. இப்போ இது ரொம்ப முக்கியமா.. எப்படியோ , நமக்கு காரியம் நடந்தா சரிதான..", என்று பதில் கூற தவிர்த்தவளாக ப்ரியா , அவன் ஆர்டர் செய்து இருந்த குளிர்பானத்தை பருக ,

அவள் முழியில் தென்பட்ட திருட்டுத்தனத்தை கண்டுக் கொண்டவனோ , அழுத்தமாகவே தன் தாடையை தடவியவாறு ,
" உன் சிரிப்பும் சரி , முழியும் சரி.. ரொம்ப வில்லங்கமா இருக்கு. ஒழுங்கு மரியாதையா சொல்ல போறியா இல்லையா..", என்று மிரட்டல் விடுக்க ,

' அச்சோ ப்ரீ சொதப்பீட்டியே .. இப்போ , சொல்லலேனா விட மாட்டான் போலயே..', என்று மனதிற்குள் புலம்பியவளாக ,

" அது.. உங்களுக்கு பொண்ணு அமைஞ்சதா பாப்பா சொன்னாளா.. எதுக்கு நம்ம வைஷ்ணவ் இருக்கான்.. அவனை உருட்டி மிரட்டி.. உங்களை அவன் பார்த்த மாப்பிள்ளை மாதிரி வீட்டுல பில்டப் கொடுக்க வச்சேன் . சரண் ஸார் , தாரா மேம்மோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ங்கிற நீங்க .. அந்த அந்தஸ்தும் கூடவே இருந்ததா.. அம்மா அப்பாக்கு டபுள் ஓகே.. உங்க அம்மாகிட்ட நானே நேரடியா பேசீட்டேன் . அவங்களும் சரின்னு சொல்லீட்டாங்க.. ", என்றவள் எழுந்து அவன் அருகே நெருங்கி அமர்ந்தவளாக ,  " பாருங்க ,  லவ்க்காக நான் எத்தனை ரிஸ்க் எடுத்து இருக்கேன் . ஆனா , நீ உங்க அம்மாகிட்ட கூட இந்த மாதிரி எனக்கு அந்த பொண்ணு ப்ரியா மேல இன்ட்ரஸ்ட் இருக்கு . அவகிட்டே கன்பார்ம் பண்ணிட்டு சொல்றேன்னு.. ஒரு வார்த்தை சொல்லலை.. ஆனா , நீ வந்து என்னை மிரட்டீட்டு இருக்க..", என்று படபடவென பொரிந்து தள்ள.. எதோ ஒன்று அவனுக்கு பலமாக இடித்தது .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now