❤️ பகுதி - 135 ❤️
வேந்தன் இரவு பத்து மணிக்கு அறைக்குள் நுழைந்து இருக்க , ஆரவ் மற்றும் ரிச்சர்ட் வாயில் சிகரெட்டும் கையில் சீட்டுக்கட்டுமாய் விளையாடிக் கொண்டு இருந்தார்கள் .
வேந்தனை காணவும் , " வேந்தா.. எதுவும் தேறிச்சா.. ", என்று ஆரவ் கேட்டிட ,
" ம்ச்சு . இல்லை டா.. சம்பளம் வர இன்னும் ரெண்டு நாள் இருக்கு .. எப்படியாவது சமாளிக்கணும்..", என்று அணிந்து இருந்த ஆடைகளை அகற்றியவன் கைலிக்குள் தன்னை புகுத்தும் கொள்ள ,
" ரெண்டு நாள் இருக்கட்டும்.. இப்ப எப்படி சாப்பிட..", என்று கடுப்படித்தான் .
தன் விளையாட்டில் மட்டுமே கவனமாக இருந்த ரிச்சர்ட் , " டேய்.. போட்ரா..", என்று எகுறிட ,
" பசிக்குது டா.. ", என்று பாவமாக ஆரவ் கூற ,
அப்பொழுது , ரிச்சர்ட்டின் அலைபேசி இசைத்து.. குட்டி என்றவனாக ஆரவ் அவனிடம் கொடுத்து குறுகுறுவென பார்த்துக் கொண்டு இருக்க .
" சொல்லு டா.. என்ன இந்த நேரத்தில...", என்று அவ்வளவு மென்மையை தாங்கி இருந்த ரிச்சர்ட்டின் குரலில் இருவரும் திகைக்க.... அவன் கேள்விக்கும் பதில் சொல்லாமல் இளையவல் செறுமியவளாய் ,
" ண்ணே.. அண்ணே..", என்று மட்டுமே அழுகையுடன் அழைத்து. கதறிக் கொண்டு இருந்தாள் .
பட்டென்று , எழுந்த ரிச்சர்ட் , " குட்டி என்னாச்சு.. ", என்று விசாரித்தாலும் சட்டையை அணிந்தவனாகவே அவசரமாய் வெளியேறி , அவன் பின்னோடு ஆரவ்வும் ஓடியவன் .நீ எதற்கு என்றது போலான பார்வை இருந்தாலும் , வேண்டாம் என்று மறுக்காமல் , ஆரவ் வண்டி எடுக்க பின்னால் அமர்ந்துக் கொண்டவன் வழியை கூறி , மீண்டும் அதே எண்ணிற்கு முயற்சிக்க , அதுவோ எடுக்கப்பட்டாமல் போனது .
" ச்சை..", என்று இயலாமையால் வெடிக்க ,
" என்னாச்சு டா.. யாரு..", என்று விசாரித்தவனிடம் ,
" தெரியலை.. குட்டி அவ்வளவு சீக்கிரம் அழுக மாட்டா..", என்று மட்டுமே பதில் கூறியவன்...
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...