வா.. வா.. என் அன்பே - 16

1.5K 37 12
                                    

பகுதி - 16

நாட்கள் நத்தையாக அனைவருக்கும் நகர்ந்துக் கொண்டிருக்க.. ரிச்சர்ட்.. ஆர்.பீ.எஸ்ஸின்.. கைப் பொம்மையானான் . ரிச்சர்ட்டின் மனதிலோ.. நாயகன் படத்தின் வசனத்தை தினம் தினம் நினைவு கூர்ந்தவாறு இருந்தது.. " சரண்மித்ரனை நல்லவரா.. கெட்டவரா ?" என்று..

இப்படியே, அவரவர் வாழ்க்கையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் நத்தையாக‌.. நகர்ந்து கொண்டிருக்க.. தன் வாழ்வையே மீண்டும் புரட்டிப் போட காத்திருக்கும் அழைப்பு என்று அறியாதவனாக.. தன் தந்தையின் அழைப்பை ஏற்றான் சரண்மித்ரன் . அதில் கூறப்பட்ட விஷயத்தில், உள்ளுக்குள் பெரிதும் கலங்கினாலும்.. வெளியே காட்டாது.
" சரி.. நான் வரேன்.‌." என்று அழைப்பைத் துண்டித்தவன்..

விக்கியை அழைக்க நினைக்கையில், பதற்றத்தோடு வந்த நண்பனை காணவும்.. " பாத்துடா.. ஃப்ளைட் செக் பண்ணு.‌ இல்லேனா.. ப்ரைவெட் ஜெட் புக் பண்ணீடு.. பாஸ்போர்ட் எல்லாம் எடுத்து வச்சுக்க.. ரிச்சர்ட்டையும் வர சொல்லு.. கேன்சல் ஆல் த ப்ரோகாராம்ஸ்.. ஃபார்  எ வீக்", என்று மடமடவென உத்தரவுகளை பிரப்பித்தவன்.. இந்தியாவிற்கு கிளம்பத் தயார் ஆனான் .

வெளியே நிதானமாக இருப்பது போல்.. தன் நண்பன் முன்னிலும்.. தன் உள்ளக்குமுறலை ,  வெளியிடாதவன்.. தனிமையில்,  பாட்டியின் உடல்நிலை பற்றிய கவலை ஒருபுறமென்றால்.. மீண்டும் அங்கு செல்ல வேண்டுமே என்ற நினைப்பு.. இங்கே இப்படியே இருந்திவிடக்கூடாதா என்ற ஏக்கம்... யாரையும் பார்க்க பிடித்தமில்லை... மீண்டும் அதே வட்டத்திற்குள்.. கால்தடம் பதிய விரும்பவில்லை.. அவன் வீடு.. அவன் குடும்பம்.. அவன் ஊர்‌.. ஒரு காலத்தில் அவனைக் கொண்டாடிய கூட்டம்.. ஆனால்.. ! இன்றும்.. அந்த ஆனால் ! என்றும் அங்கு தன்னுடன் இணைந்திருக்கவே.. வெறுத்தவனாய் .

இங்கிருந்து இரவு விமானத்திலேயே கிளம்பினான் , நீண்ட பெரிய.. ஆறாண்டுகளுக்குப் பிறகு.. மதியம் போல் சென்னைக்கு வந்திறங்கியவனை, விமான நிலையத்திலேயே சூழ்ந்திருந்த செய்தியாளர்களை.. பத்திரிகையாளர்களை.. கொஞ்சமும் கண்டுக்காமல்.. தன் வாகனத்தில் மின்னலென பறந்திருக்க.. அங்கிருந்த சோசியல் மீடீயா நபர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியாகவே இருந்தது.

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now