❤️ பகுதி - 137 ❤️
தாரா , தன் படிப்பு, படிக்கும் கல்லூரி என்று அவளை பற்றிய விபரங்களை கூறிக் கொண்டே வர , யாரு என்றே தெரியாத ஒருவனிடம் அனைத்து சொல்லுகிறாளே என்று அவனுள் பெருங்கோபம் கிளர்ந்து எழுந்ததாய் .
அந்த ஆத்திரத்தில் வெகுண்டு இருந்தவனின் முன்பாக அவள் நிற்க , ரிச்சர்ட் யோசிக்காமல் கரத்தை வீசி அவளது கன்னத்தையும் பதம் பார்த்துடன் அல்லாமல்.. "எவனோட வண்டில ஏறினாலும் இப்படிதான் எல்லா விபரத்தையும் சொல்லி.. வாடா வந்து என்னை கடத்தீட்டு போங்கடான்னு சொல்லுவியா நீ..", என்றும் ஆத்திரத்தில் வெடித்து முறைக்க ,
அவளுடைய விழிகளோ வியப்பில் விரித்ததாய் . கடந்த சில நிமிடங்களாக , அவனாக இருப்பானோ என்று குழம்பித் தவித்தவாறு இருந்தவளுக்கு அவன் காட்டிய சீற்றமும் , பேச்சும் இவனே ரிச்சர்ட் என்று தெளிவாய் அடையாளம் காட்டியதில்.. தாராவிற்கு நிற்கும் இடமும் , உண்டான சூழல் அனைத்தும் மறந்து போக , அவனின் தோற்றத்தை மட்டுமே தனக்குள்ளாக நிறைத்துக் கொண்டு இருந்தாள் .
புருவம் வரை சுருள் சுருளாய் விழுந்த முடிகளும் , திருத்தமாக இருந்த புருவத்தின் கீழ் கூர்மையான விழிகள் அக்னிப்பழம் போல் சிவந்து துளைக்க , கரடுமுரடாய் வளர்ந்து இருந்த தாடியும் மீசையும் , அவன் முரடன் என்று அடையாளப்படுத்த.. ஹேண்டிலை முறுக்கிய கைகளில் முறுக்கேறிய நரம்புகள் , ஒல்லியான தேகம் என்று அணுவணுவாய் கண்களால் படம் பிடித்தவளுக்கு , அவன் கோபத்தில் கத்திய எந்த வார்த்தைகளும் காதில் கேட்காமல் இருக்க ,
அதிகமாய் ஆட்டோ கிடைக்கும் ரோட்டில் நிறுத்தி அவளை இறக்கிவிட்டதால் , அவளை கடந்து செல்ல முயன்றவனை அங்கு இருந்த பேட்ரோல் காவல் அதிகாரியின் குரல் மைக்கில் ஒலித்து தடுத்து நிறுத்தியது ,
" ஏய் சிகப்பு சட்டை.. அங்க என்ன அந்த பொண்ணு கூட பிரச்சனை . ரெண்டு பேரும் ஓரமா நில்லுங்க..", என்று அறிவித்து இருவரின் கவனத்தை ஈர்க்கவும் செய்து இருந்தார் .
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...