வா.. வா.. என் அன்பே - 132

1K 42 4
                                    

❤️ பகுதி - 132 ❤️

விக்கி மற்றும் ரிச்சர்ட் வெளியே நடப்பது எதுவும் அறியாதவர்களாக கலாட்டாவோடு உரையாடிக் கொண்டு இருக்க.. அதே ரெஸிடென்ஸியின் மற்றொரு இடத்திலோ , ஆர் . பீ . எஸ் பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் கம்பீரமாக , தன் மிடுக்கு குறையாதவனாய்.. புதிய முதலீட்டாளர்களை குறித்து பெருமையுடன் கூறியவன்..

" ஆர் .பீ. எஸ் ஹோட்டல்கள் உலகளாவிய போட்டித்தன்மையை வெளிப்படுத்துவதுடன் .. இந்திய ப்ராண்டினை உலகு எங்கிலும் உருவாக்கப்படுவதற்காகவே ஸ்கைலேன்ட் ஹோட்டல் மற்றும் ரிசார்ட் எங்களுடன் கைக்கோர்த்து.. கோவா , அஹெமதாபாத் , கொல்கத்தா , சிம்லா ஆகிய நான்கு இடங்களில் ஆர் . பீ .எஸ் ரெஸிடென்ஸியுடன் இணைந்து மேலும் பல சொகுசு ஹோட்டல்களை புதுப்பித்து வலுப்படுத்த போவதில் பெருமை அடைகிறோம்..", என்றவன் .. "கடந்த ஓர் ஆண்டிற்குள்ளாக இந்தியாவில் இத்தகை அசுர வளர்ச்சிக்கு என்னுடன் துணை இருந்து.. தங்களின் கடின உழைப்பால் பெருமை தேடித் தந்த என் ஆருயிர் நண்பர்களான விக்கி மற்றும் ரிச்சர்ட் இருவருக்கும் 40 % வேலை பங்குதாரர்கள் என்றும் மகிழ்ச்சியுடனும் பகிர்ந்துக் கொள்கிறேன்..", என்று அழகான ஆங்கிலத்தில் பெருமை பொங்க கூறியவனின் பேட்டியே முக்கிய செய்திகளாக அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்பாகிக் கொண்டு இருக்க..

இரவு உணவை , தாமரை  குடும்பத்தில் உள்ளவர்வர்ளுடன் பகிர்ந்தவர்களாக மஹா மற்றும் வீரா இணைந்து இருக்க.. வந்தபோது காண்பித்த மிரட்டலுக்கு சற்றும் பொருந்தாது போல் அனைவரும் அன்புடனே அவ்விருடன் உரையாடிக் கொண்டு இருக்க.. அவ்வபோது வீராவே மஹாவின் காதில் கௌன்டர் கொடுத்து கிசுகிசுத்தவளாய் இருந்தாள் ‌.

" தாமரை அவங்களை கெஸ்ட் ரூமுக்கு கூட்டீட்டு போ.. ", என்று கூறிய மயூரியிடம் , அனைத்து திசைகளிலும் அவள் தலையை உருட்ட..

" என்ன..", என்று குரலில் கண்டிப்பை தேக்கியவராய் வினவ..

" இல்லை அத்தை என்னோடவே.. ", என்று இழுத்து நிறுத்தியவள் சரண் வெளியூர் பயணத்தில் இருப்பதாக நினைத்து இருந்தாள் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now