வா.. வா.. என் அன்பே - 133

2.2K 39 16
                                    

❤️ பகுதி - 133 ❤️

ரிச்சர்ட்டின் முகத்தில் வழிந்த மென்மையும், செக்கச் சிவந்த விழிகளாய் இருந்த போதிலும் , அதில் வழிந்த ஆசையிலும் விக்கி மற்றும் சரண் வியப்பில் மிதந்து இருக்க அதனை கண்டுக் கொள்ளும் நிலையில் எல்லாம் அவன் இல்லை ..

"அவளை முதன்முதலா எப்ப பார்த்தேன் தெரியுமா..", என்று ஆவலுடன் துவங்கியவனாய் , "இருபத்தி ஒன்னு ஆகஸ்ட் 2009.. " என்று கனவில் மிதப்பவன் போன்று கூறி இருக்க , விக்கிக்கு மட்டும் இல்லாது இது சரண் மித்ரனுக்கும் புதிய தகவலே..!

அவன் தேதியுடன் நிறுத்தி இருந்தாலும் பரவாயில்லை இரவு ஏழு பத்து என்றும் அடர் நீலப்பச்சை சுடிதார்ல மயில் மாதிரி இருந்தா.. என்று சொல்லி அதிர்வலையை கிளப்பி இருந்தான் .

" என்ன மாப்ள.. உன்னோட 150 பக்க ரிப்போர்ட் பேப்பர்க்குள்ளேயும் தேடினாலும் கிடைக்காத தகவல் இது போல..", என்று நக்கல் வழிந்தவனாக சரணிடம் தெனாவட்டாக கேட்டிட , சரணின் உதடுகள் மட்டுமே லேசாக வளைந்து இருந்தாலும் அவனிடத்தே எவ்வித மாற்றங்களும் இல்லை .

" இருக்காது மச்சி.. ஏன்னா அவளை இங்க... இங்க அவ்வளவு பத்திரமா பூட்டிவச்சு இருந்தேன்.. என்னோட நிழல் கூட அவ மேல படவிடாம பாதுகாப்பா வச்சு இருந்தேன்.. ", என்று அவன் இதயத்தின் மீது விரல்களால் குத்திக் காண்பித்தவனாக சொல்லி விழிகளை மூடிக் கொள்ள ,

விக்கியால் நம்பவே இயலாது போனதாய்.. ஏனெனில் ரிச்சர்ட் கூறிய வருடம் சரண் , விக்கி மற்றும் தாரா மூவரும் பத்தாம் வகுப்பு படித்தவர்களாய்..

அதனை விக்கி வார்த்தைகளாகவும் வெளியிட்டு இருந்தான் .. " டேய் நாங்க டென்த் தான்டா அப்ப படிச்சுட்டு இருந்தோம் ..‌", என்று அதிர..

" இதுல பெருமை வேறயா உனக்கு .. ஏன்டா ஸ்கூல் படிக்கும் போதே பர்த் டே பார்ட்டியா.. உங்கள்ள யாருக்குடா அன்னைக்கு பிறந்தநாள் .‌.", என்று தன் இயல்பை மீட்டு எடுத்தவன் போல் அவனிடம் எகுறிட..

வா.. வா... என் அன்பே...Opowieści tętniące życiem. Odkryj je teraz