வா.. வா.. என் அன்பே - 138

873 30 7
                                    

❤️ பகுதி - 138  ❤️

தாராவின் அணைப்பை  முற்றிலும் எதிர்பாராத ரிச்சர்ட் திகைத்து சிலையாக நின்றுவிட , நொடிக்குள் அணைத்த நிலையிலேயே நன்றியை கூறி விலகியவள் நட்பாய் புன்னகை சிந்தி வெளியேறிவிட்டாள் .

ஹா.. என்று வாய் திறந்து காற்றை வெளியேற்றி , தன்னை நிலைப்படுத்தியவனாக நெற்றியில் அரும்பிய வியர்வைத் துளிகளை  தன் கைக்குட்டையால் அழுத்தமாக துடைத்து அவ்வறையில் இருந்து வந்தவன் தாராவை பார்க்க , அணைப்பின் பாதிப்பு ஏதுமின்றி அங்கு இருந்தவர்களிடம் இயல்பாக உரையாடிக் கொண்டு இருக்க..  அதுவரை அவன் மூளையை செயல் இழக்கச் செய்த திகைப்பின் பாதிப்பு , எங்கோ மறைந்துவிடவே , சட்டென்று கடுமையை பூசிக் கொண்டவன்.. அவளுக்கு எதிர்ப்புறமாய் சென்று பணிகளில் ஈடுபட்டு இருந்தான் .

சாந்தனின் வருகையில் , அவ்விடமே அமைதியை பூசிக் கொள்ள , ஓடி வந்த ஹஸினிடம் , "ஆரவ் எங்க.. என்ன எல்லாம் ரெடியா இருக்கா..  சரி முதல்ல க்ரௌட் ஷாட்டு எடுக்கணும்...", என்றவர் தன் கேமராமேனிடம் திரும்பி இருந்தார் .

அப்பொழுதே ரிச்சர்ட் அங்கு இருப்பதை கவனித்த சாந்தன் கையாட்டி அவனை அருகில் அழைக்க , சாந்தியுடன் இருந்தவன்‌.. தன் வேக நடையில் அவரை நெருங்கி ,

" ண்ணே..", என்று பணிவாய் நிற்க,

" என்னடா.. இந்தப்பக்கம்..", என்றார் வியப்பாய் ,

" வேலையா வந்தேன்.. ஆரவ் நிக்க சொன்னான். அதான்..", என்று அசட்டு சிரிஆப்பு ஒன்றை சிந்தியவனாய் ,

" நாய ஏவினா அது வாலை  ஏவுதாடா..", என்று கிண்டலாக சிரித்தவரினுடன் அவனும் இணைந்து சிரித்தவாறே ,

" ண்ணே.. அவசரம் எல்லாம் சொல்லீட்டா வரும். நேத்துலேருந்து பைய பாத்ரூம்ல தான் குடித்தனம் நடத்துறான்.. அவனை கூட்டீட்டு வந்ததே நான் தான் .. ", என்று சரளமாக பொய் கூற ,

" வாத்தயாருக்கிட ஆரம்பிச்சதை இன்னும்  நிறுத்தலடா நீங்க.. அவனை எங்க இருந்தாலும் சீக்கிரம் வர சொல்லு..   நீ இங்கதான.. வேந்தனுக்கு வேற வேலை கொடுத்து இருக்கேன்.. என்னை டென்ஷன் பண்ணாதீங்க..",  , என்று கேள்வியாய் நிறுத்த ,

வா.. வா... என் அன்பே...Donde viven las historias. Descúbrelo ahora