“என்னங்க நம்ம எழிலுக்கு மாப்பிள்ளை பார்க்கிற விஷயம் இப்போதைக்கு அவளுக்குத் தெரியாம இருக்கறதுதான் நல்லதுங்க. அவளுக்கு மட்டும் தெரிஞ்சுது அவ்ளோதான். வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பா அதோட விட்டா கூட பரவால்ல... மாப்பிள்ளை வீட்டுக்கே போய் அவ வாலுத்தனத்தை காட்டி அவங்களைத் தலைதெறிக்க ஓட வச்சுடுவா.“ என்று பயத்தோடு திவ்யா தயாளனிடம் கூற அவருக்கும் கூட உள்ளுக்குள் பயம் எட்டிப்பார்த்தது அன்றய நிகழ்வை எண்ணி..
ஆறு மாதத்திற்குள் மகளின் திருமணத்தை முடித்துவிட முடிவுசெய்து எழிலுக்கு வரன் பார்த்து கொண்டிருந்த நேரத்தில், திவ்யாவின் தோழி சுதாவின் மூலமாக ஒரு வரன் வந்தது.
“மாப்பிள்ளை விட்டார் மிகவும் நல்ல குடும்பம் வீட்டிற்கு ஒரே பிள்ளை எந்த பிக்கல் பிடுங்களும் இருக்காது. நம்ம எழிலை நல்லா பார்த்துப்பாங்க. தங்கத்தட்டுல வச்சி தாங்குவாங்க திவ்யா. ஆனா, என்ன?? சவரன் தான் கொஞ்சம் அதிகமா எதிர்பார்ப்பாங்கன்னு நினைக்குறேன்“ என்று பீடிகையோடு திவ்யாவின் தோழி சுதா கூறினார்.
“எவ்ளோ எதிர்ப்பார்ப்பாங்க? “ சிறுஅச்சத்தோடு திவ்யா கேட்டார்.
“என்ன ஒரு நூறு சவரன் நகையும், காரும் வாங்கி தர சொல்லுவாங்க திவ்யா" என்று சுதா கூற, ‘இப்போ தங்கம் விக்குற விலைக்கு நூறு சவரன் நகை ரொம்ப அதிகம்னு தோணுது. இது நம்ம தகுதிக்கு கொஞ்சம் அதிகமா இருந்தாலும் நம்ம மகளுக்குத்தானே போட போறோம். அங்க அவ எந்த குறையும் இல்லாம சந்தோசமா இருப்பா’ என்று தாய் உள்ளம் தன் மகளுக்காக சுயநலமாய் சிந்தித்தது.
சுதா மாப்பிள்ளை குடும்பத்தைப் பற்றிப் புகழ்ந்து தள்ளினார். அந்த வரனை வேண்டாம் என்று சொல்ல மனம் வரவில்லை திவ்யாவிற்கு. தன் கணவனுடன் இதைப் பற்றி ஆலோசித்துப் பின் முடிவை கூறுவதாக தோழியிடம் கூறினாள் திவ்யா.
தயாளனிடம் எழிலுக்கு வந்த வரனை பற்றி அனைத்தையும் சொல்ல தயாளனும் யோசித்து, சரி என்று கூறிவிட்டாலும் அவரின் எண்ணம் முழுவதும் ‘இருக்கும் சேமிப்பு அனைத்தையும் ஒரு பெண்ணிற்கே செலவழித்து விட்டால் மற்ற இரு பிள்ளைகளின் படிப்பிற்கு என்ன செய்வது !?‘ என்ற கேள்வி மட்டுமே ஓடி கொண்டிருந்தது.
YOU ARE READING
கதிரழகி
General Fictionஇந்த ரிலேயில் எங்களுடன் இணைந்து எழுதும் எழுத்தாளர்கள் 1.தர்ஷினிசிம்பா (W & P) 2.ஹேமாஇன்பா(W&P) 3.ஆஷிக் (W & P) 4.வதனிபிரபு (P) 5.இதழிகா (W & P) 6.செவ்வந்தி துரை (W & P) 7.காவியா செங்கொடி (W & P) 8.SaraMithra95 (W&P) 9.நிருலெட்சுமிகேசன்(W & P) 10.ரஞ்...