46. மகாராஜ்
அஷ்வினுடன் பேசிவிட்டு அந்த மனநல மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தவன், கல்லூரிக்கு செல்ல தனது வண்டியை ஸ்டார்ட் செய்தவனின் நினைவில் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது நேற்றைய நினைவு.
'பிரியங்கா இல்லைனா வேற யாரா இருக்கும்?' என்று யோசித்தவாறே காரை செலுத்தினான். கல்லூரிக்கு வந்தவன் பார்க்கிங்கில் பைக்கை நிறுத்திவிட்டு ஸ்டாப் ரூம் நோக்கி நடந்தான். யோசித்துக்கொண்டே வந்தவன் எதிரில் வந்தவனை கூட கவனியாது மோத போக தடுத்து நிறுத்தினான் அபினவ்.
"மாமா என்னாச்சு? ஏதோ தீவிரமா யோசிச்சுகிட்டே எதிர்ல பார்க்காம வரீங்க? நான் பார்க்கலனா இந்நேரம் என்னை இடிச்சு கீழே தள்ளிருப்பீங்க. மாமா!" என்றான் செல்லமாக கடிந்து.
அதில் நினைவுலகத்திற்கு வந்தவன். "ஹான்! என்ன கேட்ட அபி?" என்று கேட்டான் கதிர்.
"போச்சு போங்க. என் மாமா தி கிரேட் இளங்கதிர் பேராசிரியரா நீங்க? இல்லையே... அவர் எங்கே? எங்கே?" என கதிரை வம்பிழுத்தவன் குழப்பம் நிறைந்த முகத்தை பார்த்து தன் விளையாட்டை நிறுத்திவிட்டு அழுத்தமாக வினவினான்.
"மாமா என்னாச்சு? ஏன் டெண்ஷனா இருக்கீங்க? ஏதாவது பிரச்சனையா சொல்லுங்க! என்னால எதாச்சும் உதவ முடியுமா, இல்லை அகரன கூப்பிடவா? நீங்க இவ்வளவு குழப்பமா இருந்து நாங்க பார்த்ததே இல்லையே மாமா. சரி மாமா பார்த்துக்கோங்க. நான் கிளாஸ்க்கு போறேன் நேரமாச்சு!" என்று நகர்ந்தவனை அழைத்தான் கதிர்.
"அபி நீ சொல்றது உண்மை தான். நான் கொஞ்சம் குழப்பத்துல தான் இருக்கேன். எப்படி இதுக்கு தீர்வு கண்டுபிடிக்கிறதுனே தெரியலடா? கண்ணு முன்னாடி சாவுக்கு ஒத்திகையை பார்த்துட்டும் நான் இவ்வளவு ஸ்டாங்கா நிக்கிறேன்னா அதுக்கு காரணம் என்னோட அழகிதான் டா. என்னால அவளை யாராச்சும் ஒத்த சொல்லு சொல்லிட கூடாதுங்கிற வைராக்கியம் தான் டா அதுல இருந்து என்னை காப்பாத்துச்சுனு நினைக்கிறேன்" என்று தன் மனம் நினைத்தவை யாவும் வாய் வழியாக வருவதைகூட உணராது உளறி கொண்டிருந்தான்.

YOU ARE READING
கதிரழகி
General Fictionஇந்த ரிலேயில் எங்களுடன் இணைந்து எழுதும் எழுத்தாளர்கள் 1.தர்ஷினிசிம்பா (W & P) 2.ஹேமாஇன்பா(W&P) 3.ஆஷிக் (W & P) 4.வதனிபிரபு (P) 5.இதழிகா (W & P) 6.செவ்வந்தி துரை (W & P) 7.காவியா செங்கொடி (W & P) 8.SaraMithra95 (W&P) 9.நிருலெட்சுமிகேசன்(W & P) 10.ரஞ்...