50. வீரலட்சுமி மாடசாமி

222 40 4
                                    

கைப்பேசியில் பேசியது யாராக இருக்கும் என்ற பதற்றத்துடனும் பரபரப்பாகவும் மாடியில் இருந்து இறங்கி மண்டபத்தின் வாயிலில் நின்று சுற்றி சுற்றி பார்க்க, கதிரின் கண்களுக்கு யாரும் புலப்பட வில்லை.

அழைப்பு வந்த நம்பரை திரும்பவும் டயல் செய்ய முயற்சித்த போது அந்த எண்ணானது தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது என்றதும் கதிரோ திரும்பவும் குழப்பமடைந்தான்.

'இந்த மாதிரி நேரத்தில் யாரு போன் பண்ணுனா!, ஒரு வேளை எழிலினியாளின் ஆவியா இருக்குமோ?' என்ற சந்தேகமும் வர, 'அடேய் நீ ஒரு ப்ரொபசர்... இப்படி ஒரு சந்தேகம் உனக்கு வரலாமா?' என்று தன்னையே திட்டிக்கொண்டு யோசிக்க தொடங்கினான்.

அவன் பின்னே வந்த எழில் "பே.." என சத்தமாக குரலிட்டதும், கதிரும் திடுக்கிட்டு திரும்பினான்.

"ஹேய்! நீயா டாபி?" என்றவன் பயத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாது சகஜமாக பேசி சமாளிக்க தொடர்ந்தான்.

"நெட்டக்கொக்கு நீ நல்லாவே பயந்துட்ட, உம் முகத்தைப் பார்த்தாலேயே தெரியுது. இந்தா என்னுடைய துப்பட்டா உம் முகத்துல வியர்வை வழியுது துடைச்சுக்கோ" என்றாள் எழில்.

கதிர் சாதாரணமாக, "என்னை என்ன என்னோட செல்ல டாபி மாதிரி பயந்தாங்கொள்ளின்னு நினைச்சியா?, நாங்களெல்லாம் பேய் வந்தால் கூட அப்படியே நின்னு செல்பி எடுப்போம்ல, நாங்களெல்லாம் யாரு?" என கெத்தாக சட்டையின் காலரை உயர்த்தி விட்டான்.

'ஹேய், நெட்டக்கொக்கு உன்னோட பயத்தை இப்ப எப்படி வெளிய கொண்டு வரேன்.. பாரு..' என மனதில் திட்டம் தீட்டியவளோ, "ஏய், இளா அங்க பாரு உன்னோட எழிலினியாளின் ஆவி உம் பின்னாடி" என்றாள் பயந்தபடி.

ஒரு நொடி பயந்து பின் அதிர்ந்து திரும்பிப்பார்த்து அவளை ஏறிட்டான்.

"டாபி ஆனாலும் உனக்கு ரொம்பத்தான்டி கொழுப்பு. தாலிகட்டிட்டு அப்புறம் பேசிக்கிறேன்" என்று தன்னறைக்கு நகர முயன்றான்.

கதிரழகிWhere stories live. Discover now