51. மீராஜோ
பதட்டமாக வெளியேறிய கதிரை அவனறியாமல் பின்தொடர்ந்தனர் அபினவும் அகரனும்.
மற்றொரு ஃபோனில் பேசிக்கொண்டிருந்த அஸ்வினிடம், "பிரியங்கா இருக்கும் இடம் தெரிந்துவிட்டது அஸ்வின். நீங்கள் சந்தேகப்பட்டதைப் போல நெடுமாறன்தான் பிரியங்காவை, கடத்தி வைத்திருக்கிறான். நாம் அப்புறம் பேசலாம்." என்று கூறி போனை கட் செய்துவிட்டு, கதிர் தனது பைக்கில் பறந்தான்.
நெடுமாறன் கூறிய குடோனுக்கு முன் பைக்கை போட்டுவிட்டு வேகமாக உள்ளே நோக்கி ஓடினான் கதிர்.
கதிரின் பைக் சென்ற வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் மிகவும் பின்தங்கினர் அபினவ்வும், அகரனும்.
அதேவேளையில் டாக்டர் அஸ்வின், அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே கதிர் ஃபோனைக் கட் செய்யவும், மொபைல் ஃபோனைப் பார்த்தவர், மீண்டும் கதிருக்கு ஃபோன் செய்து நெடுமாறன் பிரியங்காவை எங்கே கடத்தி வைத்துள்ளான்?' கேட்கலாம் என்று நினைத்து, கதிருக்கு ஃபோன் செய்ய, கதிரின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.
குடோனுக்கு உள்ளே வந்த கதிர், குடோன் காலியாக இருப்பதைப் பார்த்து, "பிரியங்கா…. நெடுமாறன்…" என்று சத்தமாக அழைத்தான்.
சிறிது நேரத்தில் தடியர்கள் சூழ வந்த நெடுமாறன், "வா கதிர்! கல்யாண மாப்பிள்ளை இங்க வருவேன்னு நிஜமாவே நான் எதிர்பார்க்கவே இல்லை… நீ வராம இருந்துடுவியோன்னு சின்ன சந்தேகம் மனசுல உறுத்திக்கிட்டே இருந்துச்சு…" என்று கூறியவாறே கதிரை ஏளனமாகப் பார்த்தபடி,
"அவ்வளவு பாசம் பிரியங்கா மேல… ம்ம்?... இந்த பாசத்தை என் தங்கச்சி மேல வச்சிருந்தேன்னா,நீ இன்னொரு கல்யாணம் பண்றதுக்கு தயாராகியிருப்பியாடா?" என்று கத்தியவாறு, நெடுமாறன் ஓங்கி ஒரு அரை, கதிரின் கன்னதில் விட,
கதிருக்கு கோபம் வந்தாலும் பிரியங்காவின் நிலையை நினைத்து தனது கோபத்தை கட்டுப்படுத்தியனாய், "பிரியங்கா எங்கே?" என்று அடிக்குரலில் கேட்டான்.

YOU ARE READING
கதிரழகி
General Fictionஇந்த ரிலேயில் எங்களுடன் இணைந்து எழுதும் எழுத்தாளர்கள் 1.தர்ஷினிசிம்பா (W & P) 2.ஹேமாஇன்பா(W&P) 3.ஆஷிக் (W & P) 4.வதனிபிரபு (P) 5.இதழிகா (W & P) 6.செவ்வந்தி துரை (W & P) 7.காவியா செங்கொடி (W & P) 8.SaraMithra95 (W&P) 9.நிருலெட்சுமிகேசன்(W & P) 10.ரஞ்...