போனை வைத்த கதிர் தன்னுடன் போனில் பேசிய தன்னுடைய மாமன் மகளாகிய பிரியங்காவை நினைத்து கடுப்புடன் அமர்ந்து இருந்தான். ஏனென்றால் பிரியங்கா அவனை பல வருடங்களாக ஒரு தலையாக காதலிப்பதாக கூறி கொண்டு இருக்கிறாள். ஆனால் அவள் மேல் கதிருக்கு எந்தவித எண்ணமும் கிடையாது.
ஒரு முறை அவளுடைய குடும்பத்தினர் அனைவரும் கதிர் வீட்டிற்கு வந்து இருந்தபோது பிரியங்காவை கதிருக்கு திருமணம் செய்து வைப்பதற்கு பேசினார்கள். கதிரின் மாமா புகழேந்திக்கு எப்பொழுதும் தன்னுடைய மருமகனை நினைத்து பெருமையே அதனால் அவர் தன்னுடைய மகளை அவனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார்.
அதனால் அனைவரும் ஒன்று கூடி இருந்த நேரத்தில் புகழேந்தி கலைவாணன் மற்றும் மீனாட்சி இருவரின் முகத்தை பார்த்து "நான் உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும் அப்படின்னு நினைக்கிறேன் பேசலாமா" என்று கேள்வியுடன் ஆரம்பித்தார்.
புகழேந்தி தயங்கி ஆரம்பிப்பதை வைத்தே ஏதோ ஒரு பெரிய விஷயத்தை பேச போகிறார் என்பதை உணர்ந்த அனைவரும் அவருடைய முகத்தை பார்த்தனர் "எதுக்கு மாப்ள யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க எதுவா இருந்தாலும் தயங்காம கேளுங்க எங்க கிட்ட கேட்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை" என்று கேட்டார்.
புகழேந்தி "அதாவது மாப்பிள என்னோட பொண்ணு பிரியங்காவை நம்ம கதிருக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு எனக்கு ஒரு எண்ணம் இருக்கு வெளில எங்கேயாவது கல்யாணம் பண்ணிக் கொடுத்தா என் பொண்ணு எப்படி இருக்கா அப்படிங்கற கவலை எனக்கு இருக்கும் ஆனா உங்க வீட்ல கொடுத்தா நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன். என் பொண்ணு ரொம்ப நிம்மதியா ஒரு வாழ்க்கை வாழ்வா அப்படிங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு அதனாலதான் உங்க கிட்ட கேட்கிறேன். உங்களுக்கு இதுல விருப்பம் இருந்தாலும் இல்லனாலும் நமக்குள்ள எந்தவிதமான பிரச்சனையும் வராது அதனால எந்த முடிவாக இருந்தாலும் தெளிவா சொல்லுங்க" என்று கேள்வியாய் நிறுத்தினார்.

YOU ARE READING
கதிரழகி
General Fictionஇந்த ரிலேயில் எங்களுடன் இணைந்து எழுதும் எழுத்தாளர்கள் 1.தர்ஷினிசிம்பா (W & P) 2.ஹேமாஇன்பா(W&P) 3.ஆஷிக் (W & P) 4.வதனிபிரபு (P) 5.இதழிகா (W & P) 6.செவ்வந்தி துரை (W & P) 7.காவியா செங்கொடி (W & P) 8.SaraMithra95 (W&P) 9.நிருலெட்சுமிகேசன்(W & P) 10.ரஞ்...