"அகி டேய் அகி… எழுந்திரு டா… போ போய் பால் வாங்கிட்டு வா...இவ்ளோ நேரம் தூங்குனா எப்படி டா..வயசு பையன்...?" அரை தூக்கத்தில் அம்மாவை பார்த்து கையெடுத்து கும்பிட்டு, "ஆரம்பிக்காத.. கோயிங்.." என்றவன் சட சடவென எழுந்து கிளம்பவும் அவனை நோக்கி வந்த அவன் அப்பா, "அகி நீ இரு டா..நான் போயிட்டு வரேன்.." என்றார்.
"தெய்வமே...தெய்வமே...!!! நன்றி சொல்வேன் தெய்வமே..!!" என்றபடி மறுபடியும் போர்வைக்குள் தன்னை ஒளித்துக் கொண்டு உறக்கம் தழுவ சென்றான் அகரன்.
அகரனை தூங்க சொல்லிவிட்டு தயாளன் பால் வாங்க செல்ல, அங்கே எப்போதும் போல பால் வாங்க கதிரும் வந்திருப்பதை பார்த்து எரிச்சலானார் தயாளன்.
"ப்ச்ச்... பையன் தூங்கட்டும்னு நான் வந்தா காலைலயே இந்த துரோகியை பார்க்க வேண்டியதா இருக்கு.. ச்சை..." என திரும்பி செல்ல எத்தனித்தார்.
திரும்பி சாலையை கடக்க முயலும் நொடியில் ஒரு லாரி எதிரில் வந்துவிட அதை கவனிக்காத தயாளன் லாரியை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க, கதிர் ஓடி வந்து அவரை பற்றி இழுத்து சாலையின் ஒரு பக்கத்தில் நிறுத்தினான்.
நிதானத்திற்கு திரும்பிய தயாளன், "ச்சீ.. நீயும் உன் மனிதாபிமானமும்... உன் நிழல் பட்டாலே அருவருப்பா இருக்கு... எப்படி உன்னால அந்த மாதிரி செய்ய முடிஞ்சுது... நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட... நாசமா போயிடுவ... உன்ன மாதிரி துஷ்டன பாத்து தூர விலகணும்னு தான் நான் போயி லாரில விழ பாத்தேன்... இனி இந்த கடைக்கே வரக்கூடாது.. கண்டதையும் பார்க்க வேண்டியதா இருக்கு..ச்சை.." என எழுந்து சென்றார்.
அங்கிருப்பவர்கள் எல்லாம் கதிரை மேலும் கீழும் பார்க்க, கதிரோ வெட்கி தலைகுனிந்தாற்போல வீடு சென்றான்.
"கதிரே என்ன டா.. ஏன் முகம் வாடிருக்கு..பால் எங்க டா..?"
"அக்கா.. மறந்துட்டேன் நீயே வாங்கிக்கோ கா... நான் காலேஜ் கிளம்புறேன்..." என எதுவும் சொல்லாமல் கல்லூரிக்கு கிளம்பிவிட்டான், கதிர்.

ESTÁS LEYENDO
கதிரழகி
Ficción Generalஇந்த ரிலேயில் எங்களுடன் இணைந்து எழுதும் எழுத்தாளர்கள் 1.தர்ஷினிசிம்பா (W & P) 2.ஹேமாஇன்பா(W&P) 3.ஆஷிக் (W & P) 4.வதனிபிரபு (P) 5.இதழிகா (W & P) 6.செவ்வந்தி துரை (W & P) 7.காவியா செங்கொடி (W & P) 8.SaraMithra95 (W&P) 9.நிருலெட்சுமிகேசன்(W & P) 10.ரஞ்...