25. ப்ரியா ராஜன்

313 50 12
                                    


அனைவருக்கும் எங்கள் ரிலே சங்கமம் எழுத்தாளர்கள் குழுவின் சார்பாக இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...

நேற்று அத்யாயம் பதிவிட்டிருந்தாலும் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக இன்றும் கூடுதலாக ஒரு அத்யாயம் பதிவிடுகிறோம்...

படித்து உங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் நன்றி...


25. பிரியா ராஜன்:

"உண்மைக்குள் உறையும்
உத்தமன் நீ
பொய்மைக்குள் ஆடும்
பெண்மயில் நான்..
அன்பைத் தாங்கும்
நல்மரம் நீ
கலங்கம் துடைக்க
வழியறியாது திகைத்துக்
கிடக்கும் அறிவிலி நான்..."

மனம் முழுவதும் சோகம் வீற்றிருக்க வாடிய கொடி போல் படுக்கையில் படுத்திருந்தவளின் எண்ணம் முழுக்க கதிரையே சுற்றி வந்தது.

உடன்பிறப்புகள் அருகில் உள்ளபோது தன்னை மறந்து சிரித்து, கேலி செய்து மகிழ்பவள் தனிமையில் தான் கதிருக்கு செய்த துரோகத்தையும் அதனால் கதிர் அனுபவிக்கும் அவமானத்தையுமே நினைத்து வருத்திக் கொண்டு இருந்தாள்.

அவனிடம் அவளுக்கு நட்பும் இல்லை காதலும் இல்லை... ஆனால் அவனுக்காக வருந்தினாள். காரணம் அவளின் மனசாட்சி... பெற்றோரை ஏமாற்றிவிட்டாள். உடன் பிறப்புகளை நண்பர்களை உறவினர்களை என அனைவரையும் ஏமாற்றிவிட்டாள்... ஆனால் அவளது மனசாட்சியை ஏமாற்ற முடியவில்லையே. தினம் தினம் ஏதோ ஒரு வகையில் கதிர் அவள் தலையில் அமர்ந்து கொண்டு அவளை ஆக்கிரமித்துக் கொண்டே இருந்தான்.

தப்பு செய்துவிட்டோமே... என நூறாவது தடவையாக யோசித்தவள், தன் தம்பி தன் முன் கோபமாக நின்றிருப்பதை கவனிக்கவில்லை.

"ஓய் மேடம்... நான் வந்தது கூட தெரியாமல் அப்படி என்ன சிந்தனை... ஒருவேளை அந்த ஆளு... அதான் அந்த கதிரை பத்தி யோசிச்சிட்டு இருக்கியா என்ன?" வேண்டும் என்றே போட்டு வாங்கினான் அகரன்.

கதிரழகிWaar verhalen tot leven komen. Ontdek het nu