43. சௌந்தர்யா உமையாள்

244 49 6
                                    

'நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க..'

கணீர் என்று கேட்ட சிவனடியார் ஒருவரின் குரலில் ஈர்க்கப்பட்டு நின்றிருந்தாள் எழில்.

அது பழமை வாய்ந்த சிவன் கோவில். ஆதலால் எம்பிரானின் சன்னதி முன் நின்று, அந்த கோவிலே கேட்கும் படி அவர் பக்தி கமழ, சிவனை நோக்கி மனமுருகி பாடினார் அப்பாடலை.

"இளா.. வாங்களேன் மத்திய பூஜை பார்த்துட்டு, அந்த பாட்டையும் போய் கேட்கலாம்" என்றவளின் பேச்சை தட்டாமல் அவளுடன் சேர்ந்தே சன்னதியை அடைந்தவன், ஒரு பத்து நிமிடம் சென்று கோவிலில் இருந்து வெளியேறினர் இருவரும்.

காலையில் இருந்த மன சஞ்சலம் இப்போது பாதியாய் குறைந்திருந்தது போல் தோன்றினாலும், எழிலிடம் கூறாதது அவனுக்கு நெருடியது.

இருந்தும் அக்கனவைப் பற்றிய செய்தி அவளுக்குத் தெரிந்தால், அவனைவிட இவள் தான் பெரிதும் வருந்துவாள் என்பது அவன் அறிந்த உண்மை தானே!

அந்த ஒரு வருத்தம் மட்டுமே இப்போது மனதினுள் இருக்க, கோவில் வாயில் பக்கம் வந்ததும் ஒரு பூ விற்கும் பெண்மணி எழிலை பிடித்துக் கொண்டார்.

"கன்னு.. வயசு புள்ள தலையில பூயில்லாம இருக்கிறியே ஆத்தா.. இந்த ஒரு முழம் பூவ வைச்சுக்கோ" என்றவர் நெருக்கக் கட்டிய ஜாதி மல்லி பூவை அவள் முன்பு நீட்ட, வாங்கலாமா வேண்டாமா என்று எதிரிலிருப்பவனை நோக்கினாள்.

எழிலையேப் பார்த்திருந்தவன் அவள் அருகே வந்து அந்த பூவிற்கான பணத்தைக் கொடுக்க, அவளோ வாங்காமல் அவனையே பார்த்திருந்தாள்.

"வாங்கிக்கோ டாபி" என்றான் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்து‌.

கதிர் முறைத்தபடியே பூவை வாங்கி தலையில் வைத்தவள், "என்ன?? யார் முன்னாடியாவது என்னை அந்த பெயர்ல கூப்பிட்டா விட்டுடுவேன்னு நினைப்போ? இப்போ இதுக்கும் சேர்த்து தண்டனை இருக்க நெடுமரம் உனக்கு" என்றவள் வேகமாக அவ்விடம் விட்டு அகன்றாள்.

கதிரழகிМесто, где живут истории. Откройте их для себя