53.பாகி லக்ஷ்மணமூர்த்தி

205 38 5
                                    

இரவுகள் எப்போதும் அழகாய் இருப்பதில்லை…. வெள்ளியை உருக்கி வார்த்தார் போன்ற தூரத்து வெண்ணிலவும் வைரங்களை அள்ளி தெளித்தார் போன்று ஒளி வீசிக்கொண்டிருந்த நட்சத்திர கூட்டமும்  கூட பயத்தை ஏற்படுத்தியது.

எங்கோ வீதியில் நாய் அழும் குரலும்  இரவின் நிசப்தத்தில் சுவர்கோழியின் ரீங்காரமும்  அவனை படபடக்கச் செய்ய கடிகார முட்களின் ஓசைக்கூட விகாரமாய் கேட்டுக்கொண்டு  இருந்தது அந்த அறையில்,

ஒரு முறை சீராக மூச்சை இழுத்து விட்டு தன்னை சமன்படுத்தியவன் கதவை தாழிட்டு கட்டிலின் அருகில் வந்தான். ஏறி இறங்கும் நெஞ்சிக்கூட்டின் சீராண சுவசத்தால் ஆழ்ந்து உறங்கும் மனைவியை கண்டவனின் கண்களுக்கு ஒரு நிமிடம் எழிலினியாள் வந்து போனாள்.

"சே…. என்ன யோசிக்கிறோம்…" என்று தன்னையே கடிந்துக் கொண்டவன் தலையை உலுக்கி 'இவ என் அழகி... அழகி மட்டும் தான்…' என்று தன்னை தானே நம்ப வைத்துக் கொள்ளும் முயற்சியில் இருந்தான்.

உயிர்பெற்று இருந்த மின்சாரத்தின் பலனாய் ஏசி ஆன் ஆகி அறை முழுவதும் குளுமையை நிறைத்திருந்தது. அந்த குளுமையிலும் முகத்தில் ஆங்காங்கே வியர்வை முத்துக்கள் உருவாகி அவனுடைய பதட்டத்தை பறைசாற்ற அவள் நித்திரை கலையா வண்ணம் மெத்தையின் மற்றொரு பக்கத்தில் வந்து அமர்ந்தான் கதிர்.

இரவு முழுவதும் மனைவியை பற்றிய சிந்தனையே, 'எங்கே சென்றாள்... எப்போழுது வந்தாள்... வீட்டுக்குள் யாரோ இருப்பது போல இருந்ததே அது யார்?... காலை கேட்ட அதே கேள்வியை இப்போழுதும் கேட்கிறாளே!!! அப்படி அப்படியென்றால் இவள் யார்? எழிலியா?? இல்லை அழகியா??...' என்ற எண்ணங்களே அவனை வட்டமிட அந்த இரவு அவனுக்கு உறங்கா இரவாகி விடியலின் முன் பகுதியில் தான் சற்று கண்ணயர்ந்தான்.

ஆரஞ்சு நிற சூரியபந்து சிறிது சிறிதாக மேலேழும்பி தன் ஒளிகற்றைகளை பூமியில் செலுத்தி இதமான வெப்பத்தை பரப்பும் அதிகாலை பொழுதில் மெல்ல இமைகளை பிரித்தாள் எழில், கழுத்தில் உராய்ந்த புது மஞ்சள் கயிறு உறக்கத்தால்  முன்புறம் விழுந்திருந்தது, அதை பார்த்தவளின் விழிகள் நீரில் பளபளக்க மெத்தையின் மறுபுறத்தில் அமர்ந்த நிலையிலையே உறங்கி இருந்த கதிர் அவள் கண்களில் விழுந்தான். இமை மூட மறந்த எழிலின் விழிகள் அவனையே  பார்த்திருக்கும் நேரம்  கதவு தட்டும் ஒலி கதிரவனின் உறக்கத்தை கலைத்தது.

கதிரழகிOù les histoires vivent. Découvrez maintenant