49. ரம்யா சந்திரன்

198 40 3
                                    

49. ரம்யா சந்திரன்

அஸ்வின் தன் மொபைலில் காட்டிய புகைப்படத்தை கூர்ந்து கவனித்த கதிர் யோசனையோடு ‘நெடுமாறன்’ என்று உச்சரித்தான். அந்த புகைப்படத்தை காட்டியதிலிருந்து கதிரின் நடவடிக்கையை, முகபாவனையை கவனமாக பார்த்திருந்த அஸ்வின், கதிரின் இதழ்கள் ‘நெடுமாறன்’ என்று உச்சரித்ததும், தனது சந்தேகம்‌ இன்னும் உறதியானதை உணர்ந்தவனாய், “ஆக இவனை ஏற்கனவே உங்களுக்கு தெரியும் இல்லையா?”என்று கேட்டான்.

“ம்.. தெரியும். ஆனா இவனோட போட்டோ உங்களோட போன்ல எப்படி வந்துச்சு. இதுக்கும் இப்ப நீங்க என்ன அவசர அவசரமா வர சொன்னதுக்கும், பிரியங்கா இப்படி பிகேவ் பண்றதுக்கும் என்ன சம்மந்தம்?” என்று கேட்டான்.

"

எல்லாத்தையும் டீடெயில்டா சொல்றேன். ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நீங்க தெளிவா சொல்லணும், பிரியங்காவுக்கும், இந்த போட்டோல இருக்குறவருக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா. அதாவது நான் என்ன கேட்க வர்றேன்னா அவங்களுக்குள்ள பிரச்சனை மாதிரி ஏதாவது இருந்துச்சா?” என்று கேட்க,

கதிரோ யோசனைக்குள் ஆழ்ந்தான்.

‘நடந்த எல்லாத்தையும் இவன்கிட்ட சொல்லலாமா வேணாமா? சொன்னா இது மூலமா வேற ஏதாவது புதுசா பிரச்சனை வருமா? ஒருவேளை சொல்லாம விட்டு, அப்புறம் பின்னாடி வேற ஏதாவது பிரச்சினை வரும் போது அஸ்வின் என்கிட்ட இதை நீங்க மொதல்லையே சொல்லி இருக்கலாம்னு கேள்வி கேட்டா என்ன பண்றது’ என்று தீவிரமாக சிந்தித்தவன் அஸ்வினின் அழைப்பில் தன்னை மீண்டவனாய், “சொல்றேன்..” என்று ஆரம்பித்து தனக்கும் நெடுமாறனுக்கும் இருந்த உறவு, நெடுமாறன் யார் என்ற தகவலையும் தெளிவாகச் சொன்னான்.

இப்போது சிந்தனையில் முகம் சுருக்குவது அஸ்வினின் முறையானது. சிந்தனையினூடே அலைபேசியில் இருக்கும் நெடுமாறனின் புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்தவன்,

கதிரழகிWhere stories live. Discover now