14. ஹீரா சொற்சரம்

371 56 15
                                    


கேன்டீனில் இருந்து புறப்பட்ட எழிலின் சிந்தனையெல்லாம் நாளைக்கு எப்டி நிச்சயதார்த்தை நிறுத்துறது என திட்டம் தீட்டி கொண்டிருந்தது.

'ஆமா அந்த நெட்டகொக்கு நிஜமாவே நமக்கு ஹெல்ப் பண்ணுமா? இல்ல.. பொண்ணு பார்க்க வந்த அன்று நம்மள கோர்த்து விட்ட மாதிரி, கோர்த்து விட்டு எங்கேஜ்மெண்ட நடக்க வெச்சிடுமா?' என தீவிரமாக எண்ணியவள்.

'டேய்! முருங்கைக்காய்க்கு கை, கால் முளைச்சவனே! அப்டி மட்டும் நடந்துச்சி அப்றம் இருக்கு ஒனக்கு' என மனதிற்குள் கருவிக் கொண்டே சென்றவளுடைய மொபைல் ரிங்காக யோசனையோடே இருந்ததால் டிஸ்பிளையில் இருந்த பெயரை கவனிக்காமல் ஆன்சர் பண்ணி காதில் வைத்து, "ஹலோ" என்றாள்.

அவள் பதிலளிப்பாள் என சற்றும் எதிர்பாராதவன் அவளின் ஹலோவில் ஒரு நிமிடம் தன்னை மறந்து, "ஹாய் பொண்டாட்டி! என்ன அதிசயமா போனை அட்டன்ட் பண்ணி இருக்க?" என்றது தான் தாமதம்..

அவனின் பொண்டாட்டியில் பொங்கி எழுந்தவள், "டேய் வளர்ந்த மாடே! யாருக்கு யாருடா பொண்டாட்டி? ஆனா ஊனா கதிரழகி, பொண்டாட்டினுலா பெனாத்திட்டு இருக்க.. கைல கிடைச்சே மகனே நீ கைமா தா.. கொன்றுவேன்டா உன்னை" என்று வார்த்தைகளால் எச்சரித்து பற்களுக்கு இடையில் துப்பியவளை கண்டு,

"ஹேய் ஹேய் டாபி.. சாரி சாரி அழகி ரிலாக்ஸ்.. நா சும்மா உன்னை வெறுப்பேத்த தான் சென்னேன். நீ என்னடான்னா இந்த மாதிரி காட்டுக்கத்து கத்தற?" என்றான்.

"பின்ன நீ என்ன வேணா பேசுவ, அதைகேட்டுட்டு சார்க்கு  நாங்க அமைதியா இருக்கனும்னு நெனப்பு வேற இருக்கோ?" என தன்னை மறந்து உச்சஸ்தானியில் கத்தியவள் பிறகே சுற்றம் உணர்ந்து சற்று நிதானித்தாள்.

"ஆமா சார்! நிச்சயதார்த்த வேலை இருக்குனு சொல்லி தான் காலேஜ்க்கு வரலயாமே..? நிக்கப் போற நிச்சயதார்த்தத்திற்கு நீ ஏன்டா மாடு கணக்கா வேல செஞ்சி டைம் வேஸ்ட் பண்ற..?" என கூறி கதிரை நோகடித்து விட்டு காலைக் கட் செய்தாள்.

கதிரழகிWhere stories live. Discover now