48. ருத்விகா

220 37 3
                                    

48.  ருத்விகா

"இனி நிச்சயம் வேண்டாம் " என்ற மீனாட்சியின் உறுதியான குரலில் அனைவரும் அதிர்ச்சியில் நின்றிருந்தனர்.

எழிலின் பெற்றோர் நிலை பரிதாபமாக இருக்க தன் தாயின் கூற்றில் மேலும் கோபம் அடைந்தான் கதிர்.

கோபத்தை தாண்டி உள்ளுக்குள் பாரம் ஏற அத்தனை நேரம் தன் தாயின் முகத்தை பார்ப்பதை தவிர்த்திருந்தவன் தன் தாயின் கண்களை அப்போது தான் நேருக்கு நேர் பார்த்தான்.

அவரும் அதையே தான் எதிர்ப்பார்த்தது போல் வேண்டும் என்றே கதிரின் பார்வையை தவிர்த்து இருந்தார்.

அவரை வரவேற்ற போது இருந்த அத்தனை மகிழ்ச்சியும் தற்போது எழிலின் இல்லத்தில் காணாமல் போய் இருந்தது.

பொறுமை இழந்த கலைவாணன், "மீனாட்சி என்ன பேசுறனு இங்க  கூட்டிட்டு வந்த? இப்ப என்ன பேசிட்டு இருக்க? இத சொல்ல தான் இங்க கூட்டிட்டு வர சொன்னியா... இதுக்கு மேல நீ எதுவும் பேச வேண்டாம் கிளம்பு வீட்டுக்கு போகலாம்" என மீனாட்சிக்கு மட்டும் கேட்கும்  வகையில் கண்டிப்பான குரலில் கூறினார்.

"நீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. இன்னைக்கு ஒரு முடிவோட தான் இங்க இருந்து கிளம்புறோம். எத்தன நாளைக்கு இப்டி நிம்மதி இழந்து இருக்குறது?" என எழிலின் பெற்றோரை மட்டுமே பார்த்த படி மேலும் பேச தொடங்கினார்.

"என்ன டா இப்டி சொல்றாங்களேன்னு தப்பா நினைக்காதிங்க சம்மந்தி ! உங்களுக்கே தெரியும் இரண்டு முறையா நம்ப பேசின மாதிரி நிச்சயம் நடக்கல, மறுபடியும் இந்த நிச்சயம் வேணுமான்னு தோணுது. ஒவ்வொரு முறையும் நிச்சயதார்த்தம் நின்னு போகும் போதும் இரண்டு குடும்பத்துக்கும் தேவையில்லாத மனக்கஷ்டம். ஒரு வீட்ல கல்யாணம்னா அது எல்லாருக்கும் சந்தோஷத்த கொடுக்கனும்.. ஆனா நமக்கு அப்டியா? என்னைக்கு இந்த கல்யாணப்பேச்ச ஆரம்பிச்சமோ அப்ப இருந்து இப்ப வரை பல பிரச்சனை வந்துட்டு இருக்கு. இங்க யாருக்காவது நிம்மதி இருக்கா சொல்லுங்க, அதான் இந்த நிச்சய பேச்சே இனி வேண்டான்னு நினைக்குறேன்"  என மீனாட்சி மூச்சுவிடாமல் பேசி கொண்டிருக்க எழிலின் இல்லமே மயான அமைதியில் இருந்தது.

கதிரழகிWhere stories live. Discover now