கதிருக்கு ஆக்சிடென்ட் என்று கேட்ட மறுநொடி உலகமே இருள்வதை போல் உணர்ந்தாள் எழில்.
கண்களில் அவளை அறியாமல் கண்ணீர் கன்னம் தொட்டு கரைந்தோட அவளின் சுயத்தை உணரச் செய்தது மீனாட்சியின் வார்த்தை.
அறியா மழலை போல், வாயில் வருவதெல்லாம் வார்த்தை என சொற் தீயை அள்ளி வீசினார் அவர்.
"இப்போ உனக்கு சந்தோஷமா? மொதல்ல நீ நிச்சயத்தை நிறுத்தினப்பவே நான் உசாராயிருக்கணும்... நிச்சயம் நின்னதே நல்ல சகுனம் இல்ல... அதுவும் நீ நிறுத்தினது அதைவிட மோசம்... அப்படியே உன்னை தலைமுழுயிகிருந்தான்னா இந்நேரம் என் மகன் என்கூட இருந்திருப்பான்...
ஆனா எங்க யார் பேச்சையும் கேட்காம ஊருல இல்லாத ஊர்வசின்னு உன் பின்னாடியே சுத்தி வெளில இருந்த சூனியத்தை வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்துட்டான்.
உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதுல இருந்து என்னோட பையன் பட்ட கஷ்டம் எல்லாம் பத்தாதுன்னு இப்போ அவன் செத்தே போயிருவான் போல இருக்கு... உன்னோட ராசியும் ஜாதகமும் தான் இதுக்கு எல்லாம் காரணம்" என்று அவர் வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி கொண்டிருந்தவரை அடக்கியது அவரின் கணவர் குரல்..
"போதும் மீனா. முதல்ல ஹாஸ்பிடல் போவோம். உன்னோட கற்பனை எல்லாம் அப்புறமா சொல்லு" என்று அதட்டி விட்டு இரு குடும்பத்தாரும் ஹாஸ்பிடலுக்கு கிளம்பினர்.
என்னதான் கதிரின் அப்பாவும், அக்காவும் எழிலுக்கு சமாதானம் சொன்னாலும், மீனாட்சி சொன்ன வார்த்தை அவளை உயிருடன் கொல்ல தொடங்கியது.
அந்த வார்த்தையின் மாய உலகத்தில் சிக்கியவளுக்கு நிஜ உலக தொடர்பு இல்லை என்றானது.
ஹாஸ்பிடல் அடைந்த கதிர் மற்றும் எழில் குடும்பத்தினர் ரிசெப்ஷனில் உள்ள பெண்ணிடம் விசாரிக்க, அவளோ "அதோ அவரை அட்மிட் பண்ணவரு வராரு" என்று ஐசியு பக்கம் கை காட்ட, மொத்த குடும்பமும் ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றனர்.

KAMU SEDANG MEMBACA
கதிரழகி
Fiksi Umumஇந்த ரிலேயில் எங்களுடன் இணைந்து எழுதும் எழுத்தாளர்கள் 1.தர்ஷினிசிம்பா (W & P) 2.ஹேமாஇன்பா(W&P) 3.ஆஷிக் (W & P) 4.வதனிபிரபு (P) 5.இதழிகா (W & P) 6.செவ்வந்தி துரை (W & P) 7.காவியா செங்கொடி (W & P) 8.SaraMithra95 (W&P) 9.நிருலெட்சுமிகேசன்(W & P) 10.ரஞ்...