17.பாலதர்ஷா

329 52 16
                                    

புகைப்படத்தை அழிக்க மனமற்றவனாய் அமர்ந்திருந்தவனுக்கு அவளை ஏனோ மீண்டும் பார்க்க வேண்டுமென தோன்றியது.

செல்போனில் தெரிந்த அவள் உருவத்தை மாத்திரம் பெரிதாக்கிப் பார்த்தவனுக்கு விழிகள் கலங்கிட,
தான் ஒரு ஆண்மகன்  என்பதையும் மறந்து கரையத்தொடங்கியவனை அடக்குவது போல் அவன் கையிலிருந்த அலைபேசி சிணுங்கியது.

விழித்திரை மறைத்த கண்ணீரை துடைத்துக்கொண்டவன், திரையில் தெரிந்த இலக்கத்தை ஆராய்ந்தான்.

மாறன் என்றறிந்ததும், "சொல்லு மாறா!." என்றான் கரகரத்த குரலில்.

அவன் குரலை வைத்தே அழுதிருக்கிறான் என்பதை அறிந்தும் அதை காட்டிக்கொள்ளாத மாறன்,

"கதிர் அண்ணா! நான் உங்ககிட்ட முக்கியமான விஷயமா பேசணும். நீங்க வேலைய ரிசைன் பண்ணதால, இனி காலேஜ்ல சந்திக்க முடியாதில்லையா?  நாளைக்கு ஈவ்னிங்க் ஓல்ட் பார்க் வந்திடுறீங்களா?.." என்றான்.

"ம்.. ஓகே மாறன்." என்றவன் ஒரு சில விசாரிப்புகளுக்கு பின் அழைப்பை துண்டித்தான்.

வழக்கமாக காலேஜிலிருந்து குதூகலமாக திரும்பிவரும் எழிலின் முகம் இன்று வாட்டம் கண்டிருப்பதை கண்ட திவ்யாவுக்கு மகளின் நிலையை நினைத்து வருத்தமாகி போனது.

'இருக்காதா பின்னே!. நேற்றைய தினம் அந்த ஏமாற்றுக்காரனை நம்பி ஏமாந்து போனவள் சரியாகும் முன்னர், அவன் கற்பிக்கும் அதே கல்லூரியில் அவன் முகத்தை பார்த்துக்கொண்டே அதை மறக்க சொன்னால் அவளால் எப்படி முடியும்?. அவனை காணும் போதெல்லாம் தான் ஏமாற்றப்பட்டேன் என்ற நினைப்பே அவளை கொன்று விடுமே!' என்று மனதில் குமிறிக்கொண்டே இருந்தார்.

"பாவம் என் பொண்ணு. எத்தனை தடவை சொன்னா, எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்ன்னு, நான் தான் கேக்காம கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைச்சேன். கடைசியில என் பொண்ணு மனச நோகடிச்சிட்டாங்களே! இனி அவளா கேக்கிற வரை கல்யாண பேச்சே எடுக்க கூடாது." என்று அவள் கவலையின் காரணம் புரியாது வருந்தினார்.

கதிரழகிWhere stories live. Discover now