28. பிரவீணா தங்கராஜ்

316 52 18
                                    

     'நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன்' என்ற எழிலின் பேச்சில் உள்ளுக்குள் சிரித்தவாறு, "உன்னால என்னோட நல்லவன் என்ற பெயரை திருப்பி கொடுக்க முடியுமா?" என்றான்.

      "உங்க வீட்ல எல்லோர்கிட்டையும் நான் வந்து உண்மையை சொல்லி..." என்றவளின் பேச்சை நிறுத்து என்று கையால்  இடைவெட்டினான்.

      "இங்க பாரு எழிலழகி... என் குடும்பத்தில இருக்கறவங்க நீ சொன்னதும் புரிஞ்சுகிறாங்கனு வச்சிக்கிட்டாலும் இந்த சமூகம்.? இந்த சமூகத்திடமிருந்து என் அவப்பெயரை திரும்ப நல்லவன்னு மாற்ற முடியுமா? எங்க அக்கம் பக்கத்து வீட்ல எல்லாருக்கும் என் நிச்சயம் நின்றது தெரிஞ்சு என்னையும் என் குடும்பத்தையும் தரைகுறைவா  பேசமாட்டாங்க." என்றான்.

     "அக்கம் பக்கத்துல பேசறதை இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுடுங்க கதிர். நான் எல்லாம் அப்படி தான்..." என்றவள் பேசிய பின்னே நாக்கை கடித்தாள்.

    இந்த நேரத்தில் இயல்பான துடுக்கு எட்டி பார்க்க வேண்டுமா என்று தன்னையே திட்டி கொண்டு "சாரி சாரி.... நான் வாயவே திறக்கலை." என்றவள் ஜிப் போன்று வாயை கையை மூடி செய்கை செய்துவிட்டு, "நீங்க சொல்ல வருவதை அப்படியே கேட்டு நடந்துக்கறேன்." என்றாள்.

     "நீ நல்லவன்னு நன்னடத்தை சான்றிதழே தந்தாலும் இங்க யாரும் நம்ப மாட்டாங்க. ஆனா, நீயே என்னை கட்டிக்கிட்டா பேசறவங்க வாய் தானா மூடிடும். எனக்கும் என்னை அவமானப்படுத்திய உன்னை கல்யாணம் செய்த திருப்தி கிடைக்கும். அதுக்கு பிறகு நீ உன் வேலையை பாரு. நான் என் வேலையை பார்க்கறேன்." என்றான்.

     "கல்யாணமா... என்னால..." என்று ஏதோ சொல்ல வந்தவள் யோசித்து குழம்ப, "இவ்ளோ நடந்தபிறகு எனக்கு உன்னோட வாழவெல்லாம் இஷ்டமில்லை. ஜஸ்ட் உன்னால கெட்டு போன என்னோட கேரக்டர் திரும்ப உன்னாலேயே சரிப்படுத்த மட்டும் தான் இந்த கல்யாணம்." என்றான்.

கதிரழகிHikayelerin yaşadığı yer. Şimdi keşfedin