41.அனு சந்திரன்

257 47 6
                                    

41 அனு சந்திரன்

இமை மூடி பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்தவனை தன் தொடுதல் மூலம் நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தாள் எழில்.

மெதுவாக விழிகளை பிரித்தவனது கண்கள் குளம்கட்டியிருப்பதை பார்த்தவளது இதயம் வலித்தது.

அவனது வேதனைகளுக்கு ஆறுதலளிக்கும் விதமாக அவன் கரத்தினை இறுகப்பற்றியபடி
"இளா..." என்றழைக்க அவளது அந்த அழைப்பே அவனுக்கு பெரிய ஆறுதலாக இருந்தது‌. 

தன்னை சமன்படுத்திக்கொண்டவன் பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு
"என்னை மன்னிச்சிரு டாபி. இதை நான் உன்கிட்ட ஆரம்பத்துலயே சொல்லியிருக்கனும்." என்றான் கதிர்.

எழிலோ, "நீங்க தான் என்னை மன்னிக்கனும். என்ன ஏதுனு உங்ககிட்ட கேட்டு தெரிஞ்சிக்காம உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்." என்று தன் தவறினை உணர்ந்து எழில் மன்னிப்பு வேண்ட தன் கரத்திற்குள் சிறைப்பட்டிருந்த அவளது கரத்தின் மீது தன் இதழ்களை பதித்தான் கதிர்.

பின் "எழில்.... ஹ்ம்ம்… லவ் யூ டாபி..." என்று கதிர் கூற வழமையாய் அவன் டாபி என்றழைக்கும் போது கோபத்தில் பொங்கி எழுபவள் இன்று அதற்கு மாறாக இதழ்களில் புன்னகையை தவழவிட்டபடியே 

"நான் சொல்ல முடியாது போயா..." என்று கூற மீண்டுமொருமுறை அவள் கரங்களில் புன்னகையுடன் தன் இதழ் பதித்தான் கதிர்.

அவன் ஓரளவு சரியாகிவிட்டான் என்றுணர்ந்த எழில் அவன் வேதனை அனைத்தையும் இன்றே துடைத்தெரிந்திட வேண்டுமென்ற உறுதியுடன் கதிரிடம் பேசத்தொடங்கினாள்.

"கதிர் அதுக்கு பிறகு அவங்களுக்கு என்னாச்சு?" என்று கேட்ட ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன்.

"காருல அவளை அழைச்சிட்டு போகும் போதே அவ உயிர் பிரிஞ்சிடுச்சு. அவளோட பாடியை பார்க்கக்கூட அவ வீட்டுல இருந்து யாரும் வரல. நானே எல்லா சடங்கையும் முடிச்சிட்டு அவளை அடக்கம் பண்ணிட்டேன்.

கதிரழகிTahanan ng mga kuwento. Tumuklas ngayon