16. ஷர்மி எஸ் எஸ்

318 52 27
                                    

16. சார்மி எஸ் எஸ்

"ம்மா... எனக்கு வீட்டுலயே இருந்தா? ஒரு மாதிரி அப்சட்டா இருக்கு.. அதனால நான் காலேஜ்க்கு போகவா?" என மிகப்பணிவுடன் தன் முன் அமைதியாய் கேட்கும் மகளை பார்த்த திவ்யாவுக்கு! மனதினுள் சற்று பயம் தொற்றிக்கொள்ளத்தான் செய்தது.

அதற்குள் அங்கு வந்த தயாளன். "எழில் சொல்றது தான் சரி. நீ போயிட்டு வாம்மா." என்றார் அக்கறையுடன்.

"சரிங்கப்பா." என்று கூறியவளின் முகம் சோகத்தைக்காட்டினாலும், மனதினுள்.. 'இப்ப அந்த நெட்டக்கொக்கு முகத்தை பார்க்கணும். என்கிட்டயே வம்பு பண்ணுனான்ல? இன்னிக்கு அவனை வச்சு செய்றேன்." என முடிவெடுத்தவள்.

வழக்கத்திற்கு மாறாக.. "அகரா. நீ என்ன இன்னும் கிளம்பாம இருக்க? உனக்கு இந்த வாரம் இன்டர்னல் ஸ்டார்ட் ஆகுதுல்ல..? சோ கிளம்பு." என்றாள் பொறுப்பாக.

வருணாவிடம் திரும்பி "வரு டார்லிங். இன்னிக்கு ஒரு நாள் மட்டும் லீவ்வ கன்டினியூ பண்ணிட்டு, அம்மாக்கு ஹெல்ப் பண்ணுங்க," என்றாள் மிக அக்கறையாக.

தன் ஸ்கூட்டியில் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்ததில் இருந்து அவள் கண்கள் கதிரைத்தான் தேடியது. ஆனால், அவள் தேடலுக்கு சொந்தக்காரனான அவனோ? அவள் கண்ணில் சிக்கவில்லை... அவனைத் தேடியதில்.. எதிரில் வந்துக்கொண்டிருந்த மாறனைக்கூட கவனிக்காமல் மாறன் மீது மோதினாள்.

"இங்க யாருடா.. தூணை கட்டி வச்சது?" என வாய்விட்டு புலம்பியவள், மெல்ல நிமிர்ந்து பார்க்க, அங்கு மாறனோ அவளை கொலை வெறியில் முறைத்துக்கொண்டிருந்தான்.

'சுமோ, எதுக்கு இப்ப நம்மளை இப்படி முறைக்கிது?' என சற்று தள்ளி நின்றுப்பார்க்க. அவன் கையில் இருந்த சமோசா இவள் மோதிய வேகத்தில் மண்ணில் விழுந்திருந்தது.

"சரி.. சரி.. விடு சுமோ. உனக்கு ஒன்னு என்ன? பத்து சமோசா வாங்கித்தரேன். இன்னிக்கு என்னோட ட்ரீட்டு. ஆமா.. உங்க நொன்னன் எங்க?" என மாறனிடம் பேசியவளின் குரல், அவனுக்கு என்றாலும்., விழிகளோ! கதிரைத்தான் தேடி அலைந்துக்கொண்டிருந்தது.

கதிரழகிWhere stories live. Discover now