31. அக்னிகா

344 53 67
                                    


இரவு கம்பளியை அகற்றி விட்டு சூரியன் சுடர் விட தொடங்கும் நேரம்..

எப்பொழுதும் போல தன் ஜாகிங்கை முடித்துவிட்டு வீடு திரும்புகையில் ஏனோ தன் கண்மணி எழிலை பார்க்க வேண்டும் போல் இருந்தது அழகியின் கதிருக்கு.

'இப்போ தூங்கிட்டு இருப்பா.. மாலையில் சென்று பாப்போம்' என யோசித்தவன், வீட்டில் உள்ளே நுழைந்ததும் கை கால்களை சுத்தம் செய்துவிட்டு செய்தித்தாள் வாசிக்க முற்பட்டான்.

சட்டென்று ஒரு கணம் நடந்தவையெல்லாம்  மின்னல் வேகத்தில் வந்து சென்றது.

ஒரு வரி கூட படிக்க இயலவில்லை கதிருக்கு.. அவளின் தீ பற்றிய புடவையும், அத்தை அம்சவேணி பற்றியும் மாற்றி மாற்றி செய்தித்தாளில் உருண்டோடியது.

பின்பு ஒருநொடி கூட தாமதிக்காமல், எழுந்து வேகமாக கிளம்ப, வாசலில் இருந்து வந்த தன் தமக்கையை இடித்துவிட்டான்.

"டேய்.. ஆள்வரது கூட தெரியாம எங்கடா இவ்ளோ வேகமா போற..? இப்ப தான ஜாகிங் முடிச்சு வந்திருக்க.. இரு, உனக்கு புடிச்ச பருப்புவடை வாங்கிட்டு வந்திருக்கேன்.. சூடா டீ போடறேன்.. குடிச்சுட்டு அப்புறம் கிளம்பு.." என்று அவனை பிடித்து உக்கார வைத்தாள்.

"அக்கா.. அவசரமா ஒரு வேலையா வெளிய போறேன்.. போய்ட்டு வந்தபிறகு போட்டு கொடு.." என்று தன் கைபேசியை டயல் செய்தான்.

'அவசரமா வருதுன்னா உள்ள பாத்ரூம்ல போடா.. வெளில போற..' என்று கிண்டல் செய்தாள்.

"ப்பாஹ்ஹ்.. செம காமெடி.. மறக்காம போய்ட்டு வந்ததும் ஞாபகப்படுத்து.. சிரிக்கிறேன்.." என்று செல்லமாக அவளின் கன்னத்தில் தட்டிவிட்டு வெளியில் புறப்பட்டான்.

"காதல் கண்ண தான் கட்டும்ன்னு கேள்விபட்டருக்கேன்.. இவனுக்கு வாயையும் சேத்து கட்டி போட்ருக்கு போல.." என்று சிரித்துக்கொண்டே உள்ளே சென்றாள்.

கதிரழகிWhere stories live. Discover now