4. வதனி பிரபு

561 69 32
                                    

அனைவருக்கும் வணக்கம்!

3 அத்தியாயம் பதிவு செய்திருக்கோம். போன பதிவுல எழிலை ரொம்ப எல்லாரும் மிஸ் பண்ணதா சொல்லி உங்க கருத்துக்களை அழகா பதிவு செய்திருக்கீங்க....

அடுத்த பதிவுல எழில் சரவெடியா வராங்களான்னு படிச்சு பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்ங்க. எங்க எழுத்தாளர்கள் உங்க கருத்துக்களை கேட்க மிக ஆவலா இருக்காங்க...
உங்களின் ஆதரவு பேராதரவாக மாற மிக ஆவலாய் நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கோம்.

நன்றி.

*******

4. வதனி பிரபு:

அதிகாலை பனிச்சாரல் மெல்லிசையாய் இசைந்து கொண்டிருக்க, வழக்கம்போல அந்தப் பார்க்கில் தன் ஜாகிங்கில் இருந்தான் கதிர். தெரிந்தவர்கள் சிலர் வர, அவர்களோடு பேசியபடியே தன் ஜாகிங்கை முடித்தவன் வீட்டை நோக்கி ஓட, அப்போது அவன் கண்ணில் பட்டது அந்த பால் பூத்.

அதைப் பார்த்ததும் சட்டென்று நின்றவன் பார்வை அந்த பால் பூத்தைச் சுற்றி நோட்டமிட்டது. அந்த வாயாடி எங்கேனும் நிற்கிறாளா என்று பார்க்க, அவளைக் காணவில்லை. அழகி இல்லையென்றதும் தன் ஓட்டத்தைத் தொடர்ந்தவனுக்கு முன்னால் சோகமாக நடந்து கொண்டிருந்தான் அகரன்.

அவனைப் பார்த்ததும், “ஹேய் நீ இங்க தான் பால் வாங்குவியா.. நேத்து உன்னைக் காணோமே..” எனக் கல்லூரியில் இருக்கும் கடினத் தன்மை இல்லாமல் எதார்த்தமாகக் கேட்க, யார்ரா இது என்று திரும்பிப் பார்க்க, அங்கே புன்னகை மன்னனாக நம் இளங்கதிர்.

ஏற்கனவே எல்லோரும் நேற்று எழில் செய்ததை வைத்து அவனைத் திட்டியதில் கடுப்பாக இருந்தவன், “நேத்து நான் வரல சார். எனக்குப் பதிலா எங்க வீட்டுல வளர்த்து வச்சிருக்குற ஒரு குட்டிப்பிசாசு வந்துச்சு” எனக் கடுப்பாகச் சொல்ல,

‘இவன் என்ன லூசா’ என்பது போல் பார்த்துக் கொண்டு கதிர் நிற்க,

கதிரழகிDonde viven las historias. Descúbrelo ahora