38. ஷக்தி பிரசன்
"இல்லை" என கதிர் தலையசைக்க அதை கண்ட எழிலின் கண்களோ சில நொடிகளில் ஏமாற்றத்தையும் வெறுமையையும் பிரதிபலித்து கடைசியாக கண்ணீரை வெளியிட்டது....
கண் வழியே அவளின் வலியை உணர்ந்த கதிர் "கதி...ர...ழ...கி.....'' என அவளை அழைக்க "வேண்டாம்" என தலையசைத்தவள்.
'உன் மனதில் நான் இல்லையா..... நான் மட்டும் இல்லையா???'என அடிபட்ட பார்வை பார்த்தவள் அவன் கூற வருவதைக்கூட கேட்காமல் கொட்டும் மழையின் நடுவே தனது கண்ணீரையும் கலக்க விட்டு வீட்டை நோக்கி சென்றாள்.
செல்லும் அவளின் உருவம் மறையும் வரை அங்கேயே நின்றவனின் கண்களும் தான் காணும் காட்சி மறையும் அளவிற்கு கண்ணீரை உகுத்தன...
'ஏன் டாபி... என்னை அப்படி ஒரு பார்வை பார்த்த... நா உன்னை ரொம்ப காதலிக்கிறேன்டி..... உன்ன மட்டும் தான்டி... அது உனக்கு தெரியலையாடி... ஏன் என்கிட்ட எதுவும் கேக்கல.... எப்பவும் திட்டுற மாறியாச்சும் திட்டிட்டு போய் இருக்கலாம் தானே... ஏன்டி ஏதும் சொல்லாம போன.....???' என அங்கேயே நின்றவன் அருகில் நின்ற மாறனின் அழைப்பில் தன் எண்ணங்களை கலைத்தான்.
"ப்ரோ என்ன ஆச்சு...??? ஏன் இப்டி நிக்கிறீங்க....?? உங்க ஆளு இன்னும் சமாதானம் ஆகலையா....?? நா கூப்பிட கூப்பிட கேட்காம போறா... ??" என்றான்.
"இல்ல மாறன்.. அப்படியெல்லாம் இல்ல. நா.... ஒன்னும்... பிராப்ளம் இல்ல நீ... நீ... இன்னும் போலையா...??" என்றான் திக்கி திணறி.
மழையில் நனைந்து கண்ணீர் தெரியாமல் இருந்தாலும் அவனின் கண்களில் தெரிந்த சோகத்தினை கண்டு கொண்டவன் அதை பற்றி கேட்க மனமின்றி
"இல்ல ப்ரோ இங்க பக்கத்துல ஒரு ஷாப்ல சாட் ஐட்டம்ஸ் நல்லா இருக்கும் மழைக்கு சாப்டலாம்ன்னு அங்க இருந்தேன்.... சரி ப்ரோ நானும் கிளம்புறேன் நைட் டின்னர் வேற இருக்கு... நீங்களும் கிளம்புங்க..." என அவன் செல்ல கதிரும் அங்கிருந்து சென்றான்.... இவை அனைத்தையும் கண்ட அந்த முகமோ ஒரு எள்ளல் சிரிப்புடன் சென்றது....

ESTÁS LEYENDO
கதிரழகி
Ficción Generalஇந்த ரிலேயில் எங்களுடன் இணைந்து எழுதும் எழுத்தாளர்கள் 1.தர்ஷினிசிம்பா (W & P) 2.ஹேமாஇன்பா(W&P) 3.ஆஷிக் (W & P) 4.வதனிபிரபு (P) 5.இதழிகா (W & P) 6.செவ்வந்தி துரை (W & P) 7.காவியா செங்கொடி (W & P) 8.SaraMithra95 (W&P) 9.நிருலெட்சுமிகேசன்(W & P) 10.ரஞ்...