57.கலைவாணி

775 29 24
                                    

மலை வாழ் காற்றில், குளிர் சூழ்  இரவில், ஆதி கதிரிடம் பேசிவிட்டு நகர , கதிரின் மனம் இன்னமும் ஆதி கூறிச்சென்ற செய்தியின் தீவிரத்தில் இருந்து மீள இயலாமல் தவித்துக் கொண்டிருந்தது ...   

' யார் அந்த எதிரி ? அதுவும்  அழகியின் மூளைக்குள் எழிலினியாவைப் புகுத்தி அழகியின் தன்நிலை மாறச்செய்வதற்கு எவ்வளவு பெரிய வஞ்சம் இருக்க வேண்டும் ?'

'எழிலினியாவுக்கும் எனக்குமான காதலின் முடிவில், தன் தங்கையை இழந்து நேரடியாக பாதிக்கப்பட்ட நெடுமாறனின் எதிர்பைக்கூட சமாளித்தாயிற்று, ஆனால் இதை யார் செய்திருக்கக்கூடும், அதுவும் எனையும் எழிலினியாவையும் நன்கு தெரிந்தவராக இருக்கவேண்டும் அப்படியானால் கண்டிப்பாக அவன், என் கல்லூரி வாழ்க்கையில் என் அருகிலேயே சுற்றித்திரிந்து கல்லூரி வளாகத்தில் அலைந்து கொண்டிருந்த ஒருவன்.. யார் அவன்? ஒருவனா? இல்லை ஒருத்தியா? யாராக இருக்கக்கூடும்? இல்லை முற்றிலும் நம் கல்லூரி வாழ்க்கையில் சமந்தப்படாத புது நபராக ஏன் இருக்கக்கூடாது? '

'ஏதாவது ப்ரைவேட் டிடக்டிவ் மூலம் எனக்கும் எழிலினியாவுக்குமான கடந்த காலத்தின் நிகழ்வுகளைச் சேகரித்து வைத்துகொண்டு பின் எழிலின் நினைவை அழகிக்கு கடத்தியிருக்க வாய்பிருக்கிறது அல்லவா ? 
அப்படியே இருந்தாலும் எனக்கும் அவளுக்கும் மட்டுமே தெரிந்த , அவளும் நானும் பேசிக்கொண்ட கடைசி தொலைபேசி உரையாடலில் எழில் கூறிய அதே வார்த்தைகளை அழகி கூறுகிறாளே அது எப்படி ? இதெல்லாம் சில நாட்களில் நடத்திவிட சாத்தியம் இல்லையே ... பல நாட்களாக வஞ்சம் வைத்துக் காத்திருந்தது செய்தது போல் அல்லவா உள்ளது, ஒரு வேளை நானும் எழிலும் காதலித்த காலத்திலிருந்தே எங்களது தொலைபேசி உரையாடல் உட்பட ட்ராக் செய்யப்பட்டுள்ளதா? கண்ணுக்குத் தெரியும் எதிரிகளை எப்படியும் சமாளிக்கலாம், ஆனால் கண்ணுக்குப் புலப்படாத இந்த விஷக் கிருமிகளை என்ன செய்வது?' அவன் மூளை நொடிக்கு நூறு வினாக்கள் கேட்டு அவனை துளைத்துக் கொண்டிருந்தது, விடை தெரியா அவன் மனமோ மலைத்துக் கொண்டிருந்தது.

You've reached the end of published parts.

⏰ Last updated: Jan 31, 2022 ⏰

Add this story to your Library to get notified about new parts!

கதிரழகிWhere stories live. Discover now